டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் எம்பிக்கள் இருக்கிறோம்.. கொஞ்சம் டீசண்டா பேசுங்க.. லோக்சபாவில் பொங்கிய ஸ்மிரிதி இராணி!

நேற்று லோக்சபாவில் மத்திய பாஜக எம்பி ஸ்மிரிதி இராணி கோபமாக பேசிய சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko in Rajya sabha | உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை..வைகோ அதிரடி பதில்- வீடியோ

    டெல்லி: நேற்று லோக்சபாவில் மத்திய பாஜக எம்பி ஸ்மிரிதி இராணி கோபமாக பேசிய சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சக பாஜக எம்பியிடம் அவர் கோபமாக பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் மீண்டும் லோக்சபா தொடங்கி நடந்து வருகிறது. தற்போது நடக்கும் கூட்டத்தொடரில் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

    ஒவ்வொரு மசோதாக்களும் நிறைய விமர்சனங்களை சந்தித்து விவாதங்களை எழுப்பி வருகிறது. இந்த நிலையில் நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையில் கடுமையான மசோதா கொண்டு வரவேண்டும் என்று லோக்சபாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு எழுந்து பதில் அளித்த பாஜக உத்தர பிரதேச எம்பி ஹர்நாத் சிங் யாதவ், இந்த பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் டிவியை பார்த்து, மக்களை பார்த்துதான் கெட்டு போய் இருக்கிறார்கள். பாலியல் படங்கள் இப்போதெல்லாம் எளிதாக கிடைக்கிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இப்போதெல்லாம் எளிதாக எல்லோரும் பாலியல் படங்களை பார்க்க முடிகிறது. நான் இருந்த காலத்தில் பாப் கார்ன்தான் இருந்தது, பார்ன் (porn) இல்லை. மக்களுக்கு நாம் எதை கொடுக்கிறோமோ அதுதான் வெளியே வரும். இதுதான் பாலியல் தொல்லைக்கு காரணம், என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.

    கோபம் அடைந்தார்

    கோபம் அடைந்தார்

    இதை கேட்டதும் கோபம் அடைந்த ஸ்மிரிதி இராணி வேகமாக எழுந்து, எம்பி ஹர்நாத் சிங் யாதவ் ஒழுக்கமாக பேச வேண்டும். அவர் அவையில் இப்படி அநாகரீகமாக பேச கூடாது. கேள்விக்கு மட்டும் அவர் பதில் அளித்தால் நல்லது. முக்கிய நேரங்களில் இப்படி அவர் தவறாக பேச கூடாது.

    என்ன தவறு

    என்ன தவறு

    நீங்கள் வயதில் மூத்தவர். நாம் பேசுவதை நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது. இங்கே பெண் எம்பிக்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி நீங்கள் அவர்கள் முன்பு அநாகரீகமாக பேச கூடாது, என்று கோபமாக குறிப்பிட்டு வேகமாக அமர்ந்தார்.

    English summary
    Please talk decently says Smirti Irani in Lok Sabha - Here is the real reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X