இந்த மன் கீ பாத்லாம் வேண்டாம்.. பேசாமல் பெட்ரோல் கீ பாத் நடத்தலாம்.. பிரதமரை விமர்சித்த மம்தா
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோல் கீ பாத் என்ற நிகழ்ச்சியை நடத்தலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டங்களையும் கண்டனங்களையும் எழுப்பி வருகின்றன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100- ஐ தாண்டிவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரத்தை நரேந்திர மோடி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிவிட்டார். நேற்றைய தினம் மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது.

2024 ஆம் ஆண்டு
2024 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் பாஜகவின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால் எப்போது அவர்களை பாபுல் சுப்ரியோவை நீக்கினார்களோ அப்போதே அவர்களது ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.

எரிப்பொருள் விலை
ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்தமான நிலையில் உள்ளது. எரிபொருள்களின் விலை அன்றாடம் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசோ சும்மா உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

மன் கீ பாத்
நமது பிரதமர் மன் கீ பாத் நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறார். அதை விடுத்து அவர் பெட்ரோல் கீ பாத், டீசல் கீ பாத், வேக்சின் கி பாத் உள்ளிட்டவற்றை நடத்தலாம் என்றார். மத்திய அமைச்சர்வையில் பாஜக எம்பி ஜான் பர்லா இடம்பெற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பியது போது பாஜகவின் பிளவுப்படுத்தும் மனநிலையையே இது பிரதிபலிக்கிறது என்றார் மம்தா.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications