பிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு!
டெல்லி: பிஎம் கேர்ஸ் என்பது அரசின் பொது நிதி கிடையாது, இதனால் இதை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கிய போது மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதற்காகவும், கொரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பட்டது.
பிரதமரின் அவசர கால நிதி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பிஎம் கேர் தனியாக உருவாக்கப்பட்டது. பல கோடி பொது மக்கள், நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், பிரபலங்கள் இதற்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கினார்கள்.

வழக்கு
பிஎம் கேர்ஸ் நிதிக்கு எவ்வளவு அளிக்கப்பட்டது என்பது விவாதப்பொருளாக உள்ள நிலையில் இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி பிஎம் கேர்ஸ் நிதியை அரசியல் சாசனப்பிரிவு 12-ன் படி பொது நிதியாக அறிவிக்க வேண்டும், இதை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், இது பிரதமர் உள்ளிட்டோர் இருக்க கூடிய நிதியம் என்பதால் அரசின் பிரிவாக கருதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

யார் மனு
மூத்த வழக்கறிஞர் சம்யாக் காங்வால் உள்ளிட்ட சிலர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டி இருந்தது. மாறாக இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் முன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

பிரமாண பத்திரம்
அதில், இந்த பிஎம் கேர் என்பது ஒரு தொண்டு அமைப்பாக உருவாக்கப்பட்டது. இது அரசுக்கு கீழ், அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ் உருவாக்கப்படவில்லை. அதோடு மாநிலங்கள் அல்லது மத்திய அரசின் எந்த அவை மூலமும் சட்டமாக இயற்றப்பட்டு இந்த பிஎம் கேர் உருவாக்கப்படவில்லை.
இந்த பிஎம் கேர் என்பதை மத்திய அரசாலோ அல்லது வேறு அரசாலோ கட்டுப்படுத்தப்படும் வகையிலும், சொந்தம் கொண்டாடும் வகையிலோ, நிதி நிர்வாகம் செய்யும் வகையிலோ உருவாக்கப்படவில்லை.

நிதி
இதற்கு மக்கள், நிறுவனங்கள் சுயமாக முன் வந்து நிதி கொடுத்தனர். ஆனால் மத்திய அரசு நிறுவனங்கள் சார்பாக இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பிஎம் கேர் என்பது மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் கீழ் வரவில்லை. அதேபோல் இது பொது தொண்டு நிறுவனம் என்பதால் சிஏஜியின் ஆய்விற்கு கீழ் வராது. தணிக்கைக்கு கீழ் வர முடியாது.

சிஏஜி
இதனால் பிஎம் கேர் நிதி என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. இது பொது அரசு நிறுவனம் அல்லது அமைப்பு கிடையாது. இந்த தொண்டு அமைப்பை மத்திய அரசுகளோ, மாநில அரசுகளோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிஎம் கேர் நிதி என்பதை மார்ச் 27, 2020 உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications