பிரதமரை தூங்க விடமாட்டோம்... சொல்கிறார் ராகுல் காந்தி
டெல்லி: நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளன. பதவியேற்ற 10 நாட்களுக்குள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் சொன்னதை செய்து விட்டோம். அதே போல், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாஜக ஆளும் மாநிலங்களான அசாமில் ரூ.600 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் கிராமப்புற மக்களின் ரூ.625 கோடி மின்கட்டண பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது 'டிவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்.
The Congress party has managed to wake the CM's of Assam & Gujarat from their deep slumber.
— Rahul Gandhi (@RahulGandhi) December 19, 2018
PM is still asleep. We will wake him up too.
குஜராத், அசாம் மாநிலங்களின் முதல்வர்களை காங்கிரஸ் கட்சி, தூக்கத்தில் இருந்து எழ வைத்து விட்டது. ஆனால், பிரதமர் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் தான் உள்ளார். அவரையும் எழ வைப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications