PM KISAN : விவசாயிகளே இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு.. ரூ.2000 வேண்டுமா.. உடனே இதை பண்ணுங்க
டெல்லி: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 15-வது தவணையாக 2000 ரூபாய் பணத்தை மத்திய அரசு வங்கி கணக்கில் செலுத்த உள்ளது. அதற்கு அடுத்த ஐந்துநாளில், அதாவது அக்டோபர் 15-க்குள் இந்த 3 விஷயங்களை செய்தாக வேண்டும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. விவசாய நிலம் வைத்திருக்கக் கூடிய இந்தியா முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு பொருளாதார உதவி தருவதற்காகவே இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் (PM-KISAN) 15-வது தவணையாக ரூ.2000 உதவி தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. அதற்கு விவசாயிகள் சில விஷயங்களை அக்டோபர் 15ம் தேதிக்குள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ரூ.2000 பணம் வங்கி கணக்கில் கிரெடிட் ஆகாமல் போகக்கூடும்.
எனவே PM KISAN பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN இணையதளத்தில் உள்ளது. இதேபோல் பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ள வேண்டும்.
இதனை நீங்கள் செய்ய தவறிவிட்டால் அடுத்த தவணைத் தொகை உங்களது வங்கி கணக்கில் கிரெடிட் ஆகாமல் போய்விடும்.
இரண்டாவது விஷயம்: உங்களது நிலத்தின் விதைப்பு குறித்த சரியான தகவலை நீங்கள் வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பணம் வழங்கப்படும்.
மூன்றாவது விஷயம்: உங்கள் வங்கி கணக்கை, உங்களின் ஆதாருடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். PM KISAN பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் பலன் பெறுவதற்கு அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
இந்த மூன்று விஷயங்களை செய்ய ஐந்து நாட்களே அவகாசலம் உள்ளது. இது ஒருபுறம் எனில் அடுத்த தவணைப்பணம் அதாவது 15வது தவணைப்பணம் உங்களுக்கு நவம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னதாகவோ அக்கவுண்டில் கிரெடிட் ஆக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு இதற்கான தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிக்கவில்லை.
முன்னதாக பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஜூலை 27ஆம் தேதி பணம் அனுப்பப்பட்டது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 8.5 ஐந்து கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். 14வது தவணை பணம், 18,000 கோடி ரூபாய் அவரவரின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பப்பட்டது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications