பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா?
டெல்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் ஒரு வருட ஆட்சி முடிந்ததும் பிரதமர் மோடி அமைச்சர்கள், கட்சி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அமைச்சர்களின் செயல்பாடுகள், கட்சி முடிவுகள், அடுத்த ஒரு வருடம் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்வது வழக்கம்.

அதன்படி இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், நிர்வாகம் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் எப்படி செயல்பட்டனர், யாரெல்லாம் சரியில்லை என்று ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இதில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல் முக்கியமான திட்டம் ஒன்றை பற்றிய அறிவிப்பை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம், இது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து உள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் உட்பட பல்வேறு மாவட்ட சட்டசபை தேர்தல் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை, வேக்சின் கொள்கை விமர்சனங்களை சந்தித்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடியின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. நேற்றே இதேபோன்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நாடடைந்தது. நேற்று 4 மணி நேரம் பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்தது.
முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அமைச்சரவையில் 79 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது 12+ அமைச்சர்கள் இடம் வரை காலியாக இருக்கிறது. இதனால் இந்த அமைச்சரவை பொறுப்புகளை நிரப்பும் வகையிலும், மற்ற அமைச்சரவை மாற்றம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications