முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்.. டெல்லியில் குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முதன் முறையாக பிரதமரானவர் என்கிற பெருமைக்குரியவர்தான் வாஜ்பாய். இந்நிலையில் அவரது நினைவு தினம் நாடு முழுவதும் அக்கட்சியினரால் அனுசரிகக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வாஜ்பாய் காலத்தில் நாடு பெரிதும் பயனடைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாட்டை 21ம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுத்த முயற்சிகளை வாஜ்பாய் மேற்கொண்டார். இந்தியாவின் 140 மக்களுடன் சேர்ந்து அவருக்கு நான் இன்று மரியாதை செலுத்துகிறேன். பாஜகவிலிருந்து முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கட்சியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறார். மட்டுமல்லாது 6 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியை சிறப்பாக நடத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வாஜ்பாயின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதில் தற்போது வரை நீடித்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று பாஜக உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications