இந்தியாவில் 62 கோடி மக்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.. மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 62 கோடி மக்கள் வேக்சின் பெற்றுள்ளனர், ஆனாலும் இந்தியாவில் உள்ள மக்கள் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

Recommended Video

    Covid Vaccine போட்டவங்களுக்கும் ஏன் பாதிப்பு ஏற்படுகிறது? இதான் காரணம்

    பிரதமர் மோடி எல்லா மாதமும் மாத கடைசியில் ரேடியோவில் மன் கி பாத் உரை நிகழ்த்துவது உண்டு. மனதின் குரல் என்னும் இந்த நிகழ்ச்சியில் ஒரு மாதம் முழுக்க நடந்த விஷயங்களை, முக்கிய சம்பவங்களை தொகுத்து பேசுவது உண்டு.

    முக்கியமாக ஒரு மாதத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட விஷயங்கள், தன்னை கவர்ந்த விஷயங்களை பிரதமர் மோடி பேசுவது வழக்கம். இன்று பிரதமர் மோடி ஒலிம்பிக் தொடங்கி கொரோனா வரை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது உரையில், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வென்ற ஒவ்வொரு பதக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தது.சிறப்பானது . இந்தியா இந்த முறை ஹாக்கியில் பதக்கம் வாங்கி இருக்கிறது.

    ஒலிம்பிக்

    ஒலிம்பிக்


    ஹாக்கி ஆண்கள் போட்டியில் இந்தியா பதக்கம் வாங்கியதை மொத்த நாடும் கொண்டாடியது. மேயர் தயான் சந்த் இதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பார். இந்திய இளைஞர்கள் புதிய விஷயங்களை செய்கிறார்கள். புதிய ஆக்கபூர்வமான விஷயங்களை மேற்கொள்கிறார்கள்.

    விண்வெளி

    விண்வெளி

    விண்வெளி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் கால் பதித்து உள்ளனர். அவர்கள் அதில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார்கள். அதேபோல் விளையாட்டு துறையிலும் இந்திய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கள் குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுவதை பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

    விளையாட்டு

    விளையாட்டு

    இந்தியர்கள் தற்போது பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இந்தியா முழுக்க விளையாட்டு போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. வரும் காலத்தில் போட்டிகள் மீதான ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவின் கலாச்சாரமும், ஆன்மீகமும் உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.

     வேக்சின்

    வேக்சின்

    இந்தியாவில் 62 கோடி மக்கள் வேக்சின் பெற்றுள்ளனர். ஆனாலும் இந்தியாவில் உள்ள மக்கள் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கொரோனா காலத்தில் மக்களின் சுகாதாரம் அதிகரித்துள்ளது. நாளை ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.

    சுகாதாரம்

    சுகாதாரம்

    இந்தியாவின் சுகாதாரம் தொடர்பான கொள்கைகள் புதிய உச்சம் தொட்டுள்ளது. மன் கி பாத் உரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க கேட்கப்பட்டு வருகிறது. மன் கி பாத் உரை உலகம் முழுக்க பல்வேறு மக்களால் கேட்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மன் கி பாத் உரையை ஆர்வமாக கேட்டு வருகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+