போருக்கு ரெடியான இந்தியா? ரஷ்யா ட்ரிப்பை ரத்து செய்த மோடி.. திடீரென என்ன நடந்தது? பரபரப்பு
சென்னை: மே 9 ஆம் தேதி ரஷ்யாவின் நடக்க உள்ள வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் வெற்றி பெற்றதன் 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அங்கே ஆண்டு விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும். மே 9 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் இந்த வெற்றி தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு ரஷ்யா அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்திருந்தது.
ரஷ்ய நாட்டின் ராணுவ மற்றும் வரலாற்று வெற்றியை வெளிப்படுத்தும் வருடாந்திர நிகழ்வான இந்த நினைவு அணிவகுப்பில் பங்கேற்க பல நட்பு நாடுகளின் தலைவர்களையும் ரஷ்யா அழைத்திருந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல சர்வதேசத் தலைவர்கள் ரஷ்யாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடைசியாக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு சென்று இருந்தார்.

அந்த பயணத்தின் போது, அதிபர் விளாடிமிர் புடினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். அதோடு புடினை இந்தியாவுக்கு வருமாறு அவரை அழைத்தார். இந்த நிலையில்தான் தற்போது மே 9 ஆம் தேதி ரஷ்யாவின் நடக்க உள்ள வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர் அச்சம்
பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மோடி தந்த பவர்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம், என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.
இது போன்ற சூழ்நிலையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் / ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications