சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: ஈரான் - அமெரிக்கா போரால் மேற்காசியாவில் பதற்றமான நிலை நிலவுகிறது. இதனால், நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று லோக்சபாவில் விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று ராஜ்யசபாவில் விளக்கி பேசினார்.
பிரதமர் மோடி இன்று ராஜ்யசபாவில் உரையாற்றினார். ஈரான் - அமெரிக்கா போரால் மேற்காசியாவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் மோடி அப்போது பேசினார். மோடி தனது உரையில் கூறியதாவது:-

முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது
நிலைமையை சமாளிக்கவும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் அரசு அனைத்து வகையிலும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். இந்தப் போரின் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கக்கூடும். ஆனால் அரசு முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
நாட்டின் நலனே எப்போதும் முதன்மை. கொரோனா காலத்தில் செயல்பட்டது போல அனைத்து மாநிலங்களும் ஒரே அணியாக இணைந்து இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமான காலங்களில் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பாதிக்கப்பட கூடிய பிரிவினரே அதிகம் பாதிக்கப்படுவர்.
ஆகவே, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், இத்தகைய காலங்களில் அதிகரிக்கும் கருப்புச் சந்தை நடவடிக்கைகளை மாநில அரசுகள் கடுமையாக கண்காணித்து தடுக்க வேண்டும். கொரோனா காலத்தைப் போலவே, எரிபொருள், விநியோகச் சங்கிலி, உரங்கள் உள்ளிட்ட துறைகளில் திட்டங்களை உருவாக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு ஏழு அதிகாரப்பூர்வ குழுக்களை அமைத்துள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை
இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈரானிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.
இந்தப் போரில் மனித உயிர்களுக்கு ஏற்படும் எந்தவித அச்சுறுத்தலும் மனிதகுலத்தின் நலனுக்கு ஏற்றதல்ல. ஆகவே, அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான தீர்வை எட்ட இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நெருக்கடியான சூழ்நிலைகளில், நாட்டிற்குள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கே நாம் முன்னுரிமை அளிக்கிறோம்.
2 முறை பேசியிருக்கிறேன்
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். மேற்கு ஆசிய மோதல் நீடித்தாலும், இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. தடையின்றி விநியோகம் நடைபெற வலுவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூலதன பெட்ரோலியம் இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதை 65 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் உயர்த்தும் திட்டமும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுகளுடன் நான் 2 முறை பேசியிருக்கிறேன். வளைகுடா நாடுகளுடன் தொடர்பில் உள்ளோம். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்தும் அவர்களுடன் பேசியுள்ளோம்.
நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற ஒரு சர்வதேச கடல்வழியில் ஏற்படும் தடைகளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்" என்று பிரதமர் மோடி கூறினார். ஈரான் - அமெரிக்கா போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் பிரதமர் மோடி மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
-
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
கண்ணிவெடிகள் நிறைந்த ஹார்முஸ்.. திடீரென இறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.. ஈரானுக்கு திடீர் பதற்றம் -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல் -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்












Click it and Unblock the Notifications