டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு.. 10க்கும் மேற்பட்டோர் பலி! பிரதமர் இரங்கல்
டெல்லி: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் காலிம்போங் மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளம், பாலம் இடிந்து விழுந்த விபத்து காரணங்களால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிரிக்-சுகியாபோக்ரி சாலைக்கு அருகே ஏற்பட்ட பெரிய நிலச்சரிவு வீடுகளை அடித்துச் சென்றதுடன், வாகன போக்குவரத்தையும் முடக்கியது. தொடர் மழையால் முக்கியமான சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் சேதமடைந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புத்துறை அதிகாரி ரிச்சர்ட் லெப்சா இது குறித்து கூறுகையில், "நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளதால், சரியான புள்ளிவிவரங்கள் இன்னும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கனமழை காரணமாக நிலப்பரப்பு தளர்வடைந்திருக்கிறது. இதன் காரணமாக மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. தொடர் மழையால் புல்டோசர்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை அடைவது தாமதமாகி வருகிறது என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications