முடிவுக்கு வரும் மோதல்.. கனடா பிரதமரின் அழைப்பை ஏற்ற மோடி.. ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு
டெல்லி: கடந்த ஆண்டு முதல் நம் நாட்டுக்கும், கனடாவுக்கும் இடையே பிரச்சனை என்பது உள்ளது. இதற்கிடையே தான் வரும் 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அந்த மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக செல்ல உள்ளார்.
கனடாவில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு வரும் 15ம் தேதி தொடங்கி 17 ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டை கனடா ஏற்று நடத்துகிறது. கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற உள்ளது.

ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா உறுப்பு நாடாக இல்லை. இருப்பினும் கூட ஜி 7 நாடுகளுடன் நம் நாட்டுக்கு நல்ல உறவு என்பது உள்ளது.
இதனால் ஜி 7 உச்சி மாநாட்டை ஏற்று நடத்திய நாடுகளின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக அந்த மாநாட்டில் பங்கேற்று வருகிறார். இந்த முறை கனடா உச்சி மாநாட்டை நடத்தும் நிலையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. இதனால் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது.
இதற்கிடையே தான் நேற்றைய தினம் கனடா பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் பேசினார். கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து கூறினேன். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். கனடாவும் இந்தியாவும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள்.
இரு நாடுகளின் மக்கள் இடையே ஆழமான உறவு நீடிக்கிறது. கனடாவும் இந்தியாவும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கனடா செல்வது உறுதியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு காரணமாக இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்ற்ம்சாட்டினார்.
இதனை நம் நாடு மறுத்தது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ விடவில்லை. தொடர்ந்து நம் நாட்டின் மீது அவதூறு பரப்பினார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு அரசியல் நெருக்கடியால் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமரானார். தற்போது மார்க் கார்னி பிரதமர் மோடியை ஜி 7 உச்சி மாநாட்டுக்கு அழைத்துள்ளார். இதன்மூலம் இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications