சீமானின் “ஆடு மாடு வளர்ப்பில் தற்சார்பு” கொள்கையை மனதின் குரல் வானொலி உரையில் வலியுறுத்திய மோடி!
டெல்லி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பின் வழியேயான தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடியும் ஆடு மாடு வளர்ப்பின் மூலமான தற்சார்பு நிலையை அடைந்தவர்கள் தொடர்பாக தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசும் போது, உரையாடல் பசுமாடுகள்-எருமைமாடுகளோடு நின்று போகின்றன. ஆனால் ஆடுகளும் கூட ஒரு முக்கியமான கால்நடைச் செல்வங்கள் தாம், இவை அதிக அளவு விவாதப் பொருளாவதில்லை.

ஆடு வளர்ப்பில் களமிறங்கியவர்கள்: நாட்டில் பல்வேறு பகுதிகளில், பலர் ஆடுகள் வளர்ப்போடு இணைந்திருக்கிறார்கள். ஒடிஷாவின் காலாஹாண்டியில் ஆடுகள் வளர்ப்பு, கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தோடு சேர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தும் ஒரு மிகப்பெரிய சாதனமாக ஆகி வருகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் ஜயந்தி மஹாபாத்ரா, இவருடைய கணவர் பீரேன் சாஹூ ஆகியோரின் ஒரு மகத்தான தீர்மானம் இருக்கிறது. இவர்கள் இருவரும் பெங்களூரூவில் மேலாண்மை தொழில் வல்லுநர்களாக இருந்தார்கள், ஆனால் இவர்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு காலாஹாண்டியின் சாலேபாடா கிராமத்திற்கு வருவது என்ற முடிவை எடுத்தார்கள்.
ஒடிஷாவின் அக்ரோ அமைப்பு: இங்கே இருக்கும் கிராம மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதே வேளையில், அவர்கள் அதிகாரப்பங்களிப்பு உடையவர்களாகவும் ஆக வேண்டும் என்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த இந்த எண்ணத்தோடு இவர்கள் மாணிகாஸ்து அக்ரோ என்ற அமைப்பை நிறுவினார்கள், விவசாயிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். ஜயந்தி அவர்களும், பீரேன் அவர்களும் இங்கே ஒரு சுவாரசியமான மாணிகாஸ்து ஆடுகளை வளர்ப்பதற்கான இடத்தையும் நிறுவினார்கள். இவர்கள் சமூகரீதியாக ஆடுகள் வளர்ப்புக்கு ஊக்கமளித்து வருகிறார்கள். இவர்களுடைய பண்ணையில் கிட்டத்தட்ட பலடஜன் ஆடுகள் இருக்கின்றன. மாணிகாஸ்து ஆடுகள் அமைப்பில் இவர்கள் விவசாயிகளுக்கென முழுமையான ஒரு முறையைத் தயார் செய்திருக்கிறார்கள்.
எப்படி சாத்தியம்?: இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 24 மாதக்காலத்திற்கு 2 ஆடுகள் அளிக்கப்படுகின்றன. ஈராண்டுகளில் ஆடுகள் 9 முதல் 10 குட்டிகள் வரை போடுகின்றன, இவற்றில் 6 குட்டிகளை அமைப்பு தக்க வைத்துக் கொள்கிறது, மற்றவை ஆடுவளர்க்கும் அந்த குடும்பத்துக்கே அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, ஆடுகளைப் பராமரிக்கத் தேவையான அவசியமான சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இன்று 50 கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த இணையோடு இணைந்திருக்கின்றார்கள். இவர்களுடைய உதவியோடு கிராமத்தவர்கள், கால்நடை வளர்ப்புத் துறையில் தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறார்கள். பல்வேறு துறைகளில் வெற்றியடைந்த வல்லுநர்களும் கூட சிறிய விவசாயிகளின் அதிகாரப் பங்களிப்பு மற்றும் தற்சார்பு நிலைக்காக, புதியபுதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. இவர்களுடைய இந்த முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications