டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு ரபேல் ஊழலில் தொடர்பு இருக்கிறது.. லோக் சபாவில் ராகுல் பரபர குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது என்று லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது என்று லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ரபேல் ஊழல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரபேல் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக தினமும் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. காங்கிரஸ், பாஜக இடையே இது தொடர்பாக தினமும் காரசார விவாதம் நடந்து வருகிறது.

தொடர் சண்டை

தொடர் சண்டை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக மீது ரபேல் தொடர்பாக நிறைய ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதன்பின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ராகுலின் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். இன்று ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ராகுல் பதில்

ராகுல் பதில்

ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கத்திற்கு தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்தார். அதில், ரபேல் விமானத்தின் விலையில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தத்தில் விலை விவரம் ரகசியம் அல்ல என பிரான்ஸ் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அதனால் இப்போதே விலை குறித்த விவரத்தை பாஜக வெளியிட வேண்டும்.

மோடிதான்

மோடிதான்

நிர்மலா சீதாராமனுக்கு ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளதா என்று எனக்கு தெரியாது. ஆனால் பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது. ரபேல் விவகாரத்தில் மோடி மீதுதான் குற்றம்சாட்டுகிறேன்; மனோகர் பாரிகர் மீது அல்ல. ரபேல் ஒப்பந்தத்தில் நேரடியாக பிரதமர் மோடிக்குத்தான் தொடர்பு என குற்றம்சாட்டுகிறேன்.

அனில் அம்பானி எப்படி

அனில் அம்பானி எப்படி

என்னுடைய கேள்வி எல்லாம் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி எப்படி வந்தார் என்பதுதான். அனில் அம்பானியை உள்ளே கொண்டு வரும் அளவிற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும். இதற்கு காரணம் மோடிதான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

English summary
PM Modi has connections with Rafale jet deal scam accuses Congress chief Rahul Gandhi in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X