"இந்தியா" கூட்டணிக்கு பலம் இல்லை.. மோடிக்கு அதிகரிக்கும் "கிரேஸ்".. சர்வதேச சிஎன்என் ஊடகம் கட்டுரை
டெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பலமற்ற நிலையில் இருப்பதாகவும் சர்வதேச ஊடகமான சிஎன்என் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது
முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என்று சிஎன்என் கட்டுரையில், இந்தியாவில் தேர்தல் தொடர்பான கணிப்புகளில் மோடி மீண்டும் வெல்வார் என்று கூறப்படுகின்றன.
2023 பியூ (Pew) ஆராய்ச்சியின்படி, 10 இந்தியர்களில் எட்டு பேர் மோடியைப் பற்றி நல்ல பார்வையைக் கொண்டுள்ளனர். அவர்கள் மோடியை ஆதரிக்கின்றனர். இதில் 55% பேர் மோடிக்கு மிகவும் சாதகமான பார்வையைக் கொண்டுள்ளனர். இரண்டு முறை பதவியில் இருக்கும் பிரதம மந்திரிக்கு இத்தகைய புகழ் இருப்பது ஆச்சர்யமான விஷயம். இந்தியாவிலும் மற்றும் எந்த உலக நாட்டிலும் இரண்டு முறை ஆட்சியில் இருந்த பிரதமருக்கு இப்படி தொடர்ந்து மக்களின் ஆதரவுகள் கிடைக்க வாய்ப்புகள் குறைவு.
ஆனால் மோடி மீதான ஆதரவு மக்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், மோடியின் வலதுசாரி அரசாங்கம், வாக்குகளைப் மோசடி செய்து பறிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதன்படி தேர்தல் எதேச்சதிகாரமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளை ஒடுக்கவும், தாக்கவும், கைது செய்யவும் பாஜக தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறது. பாஜக இந்த எதேச்சதிகாரமாக போக்கு மூலமே தங்களை பலமாக காட்டிக்கொள்கிறது. பாஜகவிற்கு உண்மையில் பலம் இல்லை.
ஆனால் பலம் இருப்பதாக காட்டிக்கொள்கிறது. மோடியின் இந்து தேசியவாதம் நாட்டை பிரிகிறது. நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மதவாதம், மோதல், கலவரம் மூலம் ஆட்சிக்கு வருவதையே பாஜக விரும்புகிறது. மற்றபடி மக்களின் அடிப்படை ஆதரவு பாஜகவிற்கு இல்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
பிஜேபியை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் 27 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளன. இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி என்ற பெயரில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டணி அவ்வளவு வலிமையாக இல்லை.
அரசியல் கருத்துக்களை தாண்டி இவர்கள் கூட்டணி அமைத்து இருந்தாலும் கூட அந்த கூட்டணியில் ஏகப்பட்ட குளறுபடிகள், மோதல்கள் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் இடையிலும் பிரச்சனைகள் நிலவுகின்றன.
கூட்டணியின் முக்கிய தலைவர்களான ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரை கைது செய்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்களை கைது செய்துள்ளனர். ஆனால் அதை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி மக்களிடம் கொண்டு செல்ல பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லை
லோக்சபா தேர்தலுக்கு இடையே, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி தலைவர் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் கூறியிருந்தனர். அதேபோல் அவர் கைது செய்யப்பட்டார்.
அதிர்வலைகள்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
குறிப்பாக, பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிர்வுகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில், கெஜ்ரிவாலின் கைதை தொடர்ந்து அடுத்த கைது எந்த மாநிலத்தில் இருக்கும் என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளின் தலையீடுகள் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக அடுத்தடுத்து பல்வேறு மாநில முதல்வர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முன்பாக ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
ஹேமந்த் சோரன், ஜாரக்கண்ட் முக்தி மோர்சா+காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக பதவி வகித்து வந்தார். இப்படி இருக்கையில் அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டு குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கியது. 7 முறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியும் சோரன் ஆஜராகாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த தொடர் கைதுகள் இந்திய கூட்டணியின் வலிமையை சுருக்கி உள்ளது. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்திய கூட்டணி வலிமை குறைந்து காணப்படுகிறது, என்று சர்வதேச ஊடகமான சிஎன்என் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications