Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2000 ஆண்டு பழமையான கல்லணை.. சிறந்த உள்கட்டமைப்பின் உதாரணம்.." பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கல்லணை கட்டுமானம் குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உள்கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கல்லணை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணமாகக் காட்டினார். மேலும். 2000 ஆண்டுகள் பழமையான கல்லணை அப்பகுதிக்கு இன்னும் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள உள்கட்டமைப்புத் துறை திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார்.

அப்போது நமது நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் இருக்கும் கல்லணை குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முதலீடுகளுக்கு முந்தைய அரசுகள் தடையாக இருந்தன. அவை இப்போது நீக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் வறுமை எப்போதும் இருக்கும் என்ற மனநிலையை அகற்றுவதில் நமது அரசு வெற்றி பெற்றுள்ளது.. அதேபோல், 2014க்கு முன் ஆண்டுக்கு 600 கிமீ ரயில் பாதை மட்டுமே மின் மயமாக்கப்பட்டு வந்தது. இப்போது அது ஆண்டுக்கு 4000 கிமீ என்று எட்டியுள்ளது. அதேபோல நாட்டில் இருக்கும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு மேம்பாடுதான் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்ளது. இதே பாதையை நாம் பின்பற்றினால், 2047க்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை இந்தியா அடையும். இப்போது நாம் டாப் கியரில் வளர வேண்டும். பொருளாதார மற்றும் உள்கட்டமைப்புத் திட்டத்தை வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கப் பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இது உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் முகத்தையே மாற்றப்போகிறது. இத்திட்டத்தின் பலன்களை நாம் இப்போதே பார்க்கலாம்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இந்த பட்ஜெட்டில், 100, முக்கியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, 75,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. உள்கட்டமைப்பை மேம்படுத்த நாம் எடுத்துள்ள நடவடிக்கை மூலம் வரும் காலத்தில் ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவு வரும் நாட்களில் மேலும் குறையப் போகிறது. இதன் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்..

பட்ஜெட்டில் நிதி

பட்ஜெட்டில் நிதி

இது மட்டுமின்றி, எளிதாக வாழ்வதற்கும், எளிதாக வணிகம் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்காக வட்டியில்லாக் கடன்களை ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்ஜெட்டில் 30% ஒதுக்கியுள்ளோம். ஒருங்கிணைந்த அணுகுமுறை இருந்தால் தான் வரும் காலத்திற்கான திட்டம் தெளிவாக இருக்கும். 2014 பிறகு நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது

வரலாறு

வரலாறு

நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு நாட்டின் நிலையான வளர்ச்சியிலும் உள்கட்டமைப்புக்குக் குறிப்பிடத்தக்கப் பங்கு உண்டு.. உள்கட்டமைப்பு தொடர்பான வரலாறு அறிந்தவர்களுக்கு நான் சொல்வது எந்தளவுக்கு உண்மை என்பது தெளிவாகவே புரியும். நீர்வழிப் பாதைகளிலும் நமது முன்னோர்கள் பல முக்கிய கட்டுமானங்களைச் செய்துள்ளனர். பனாரஸ் மலைத்தொடர் கொல்கத்தாவுடன் நேரடியாக நீர்வழிகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.

கல்லணை

கல்லணை

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கல்லணை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணம். சோழ மன்னர்கள் கட்டிய இந்த கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது. இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும், இந்த அணை இப்போதும் இயங்கி வருகிறது. இது பற்றி அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். கல்லணை போன்ற பழமையான ஒரு அணை இன்றும் கூட அங்குள்ள மக்களுக்கும் அப்பகுதிக்கும் வளர்ச்சியை வழங்கி வருகிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+