டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இது பொன்னான நாள் என்று மோடி பேசினார். இந்தக் காட்சிகளை அஹமதாபாத் வீட்டில் இருந்தவாறு அவரது தாய் ஹீராபாய் பூரிப்புடன் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

Recommended Video

    Why Modi Plant a Parijat tree Ram Temple Ceremony? | Parijaat tree | Oneindia Tamil

    பிரதமர் மோடி இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    PM Modi mother Heeraben watching Bhoomi Puja ceremony of the Ram Temple in Ayodhya

    இந்த நிகழ்வை அவரது தாய் ஹீராபென் அஹமதாப்பாத்தில் தனது வீட்டிலிருந்து பூரிப்புடன் டிவி மூலம் பார்த்தார். தனது கைகளை கூப்பியவாறு வணங்கியவாறு கண்டு கழித்தார். இதற்கு முன்பும் இரண்டாவது முறையாக டெல்லியில் மோடி பதவியேற்றபோது தனது வீட்டில் இருந்தவாறு பார்த்து ஹீராபாய் கைதட்டி ரசித்தார். கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அனைவரும் தங்களது வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும், மணி ஓசை எழுப்ப வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போதும் ஹீராபாய் தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்து தட்டு வைத்து ஒலி எழுப்பினார். பின்னர் வீட்டில் விளக்கும் ஏற்றினார்.

    அயோத்தியில் இன்று நடந்த ராமர் கோயில் பூமி பூஜை மிகவும் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் அச்சம் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. பூஜை நடைபெறும்போது அமர வைக்கப்பட்ட இடத்திலும் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டது.

    பாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக.5-களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றிய பிரதமர் மோடி பாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக.5-களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றிய பிரதமர் மோடி

    இந்த விழாவுக்கு 400 குவிண்டால் எடையிலான பூக்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் ஆர்சிட்ஸ் எனப்படும் பூக்கள் தாய்லாந்தில் இருந்தும், பாரிஜாத பூக்கள் பெங்களூருவில் இருந்தும், ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறப் பூக்கள் கொல்கத்தாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயிலை கட்டி முடிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கீழ் தளத்தை முதல் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து மேல் தளங்களை முடிக்க நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

    English summary
    PM Modi mother Heeraben watching the live telecast of the bhoomi Puja ceremony of the Ram Temple in Ayodhya
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X