Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திரப் போரில் சட்ட வல்லுநர் ”வீர சாவர்க்கர்” பங்களிப்பு.. சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுதந்திரப் போராட்டத்தில் சட்ட வல்லுநர் "வீர சாவர்க்கர்' உள்ளிட்டோர் பங்களிப்பை டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி விவரித்தார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகளாவிய சட்ட சகோதரத்துவத்தின் சிறந்தவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

 PM Modi praises role of legal professionals in freedom struggle including Veer Savarkar

சட்ட வல்லுநர்கள் பங்களிப்பு: எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் சட்டத்துறையின் பங்கு முக்கியமானது. பல ஆண்டுகளாக, நீதித்துறையும் வழக்கறிஞர்களும் இந்தியாவின் நீதித்துறையின் பாதுகாவலர்களாக உள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், பாபு ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், லோக்மான்ய திலகர், வீர சாவர்க்கர் ஆகிய சட்ட வல்லுநர்கள் பங்களிப்பு செய்ட்னனர். சட்டத் தொழிலின் அனுபவம் சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேலை செய்துள்ளது, மேலும் இன்றைய பாரபட்சமற்ற நீதி அமைப்பு இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியது.

ஜி 20 மாநாடு: மகளிர் இடஒதுக்கீடு மசோதா, இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்குப் புதிய திசையையும் ஆற்றலையும் வழங்கும். டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டின் போது இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றை உலகம் நேரடியாகப் பார்த்தது.

 PM Modi praises role of legal professionals in freedom struggle including Veer Savarkar

வளர்ந்த பாரதம்: ஒரு மாதத்திற்கு முன்பு இதே நாளில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றது. 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடைய பாடுபட்டு வருகிறோம்.

உலகளாவிய ஆபத்துகள்: எல்லைகள் மற்றும் அதிகார வரம்பைப் பற்றிக் கவலைப்படாத பல சக்திகள் இன்றும் உலகில் உள்ளன. ஆபத்துகள் உலகளாவியதாக இருக்கும்போது, அவற்றைக் கையாள்வதற்கான வழிகளும் உலகளாவியதாக இருக்க வேண்டும். சைபர் பயங்கரவாதம், பணமோசடி மற்றும் செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தீர்ப்புகள்: சட்டம் தங்களுக்கே சொந்தமானது என்பதை குடிமக்கள் உணர வேண்டும். புதிய சட்டங்களை எளிய மொழியில் வரைவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒரியா ஆகிய 4 உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

யார் யார்?: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, இந்திய பார் கவுன்சில் தலைவர் துஷார் மேத்தா, இங்கிலாந்து சான்சலர் அலெக்ஸ் சாக் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் புகழ்பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய சட்டப் பிரதிதிகள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+