நெருங்கி வந்து விலகிச் சென்ற இரு துருவங்கள்!
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று நேருக்கு நேர் சந்தித்தும் எதுவும் பேசாமல் தத்தமது பாதையில் போனது சலசலப்பை ஏற்படுத்தியது.
5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு பலத்த சரிவை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ். கிட்டத்தட்ட பாஜகவின் இதயத்தில் விழுந்த அடி இது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத் தீவிரவாதத் தாக்குதல் நினைவு தினம் டெல்லியில் அனுசரிக்கப்பட்டது.

அதில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கிட்டத்தட்ட அருகருகே பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் நின்றிருந்தனர். ஆனால் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை , பேசிக் கொள்ளவும் இல்லை.
அதேசமயம் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சென்று பேசினார். அதேசமயம், மத்திய அமைச்சர்கள் விஜய் கோயல், ராமதாஸ் அத்வாலே ஆகியோர் ராகுல் காந்தியுடன் கை குலுக்கிப் பேசினர்.

சோனியா காந்தி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ஐந்து டெல்லி போலீஸார், ஒரு மத்திய ரிசர்வ் படை பெண் போலீஸ், 2 நாடாளுமன்ற ஊழியர்கள், ஒரு தோட்டக்காரர், ஒரு கேமராமேன் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications