எதிர்பார்க்கலைதானே! செங்கோல் டூ ஜெயலலிதா சேலை கிழிப்பு..திமுகவை தாறுமாறாக வெளுத்த நிர்மலா சீதாராமன்!
டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி முன்வைத்த விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார்.
லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய டிஆர் பாலு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு தாமதமப்படுத்துவது தொடர்பகா விமர்சித்தார். அதேபோல திமுக எம்பி கனிமொழி பேசுகையில், இந்தி திணிப்பதைவிட சிலப்பதிகாரத்தை படியுங்கள்.. உங்களுக்கு பாடம் இருக்கிறது என பாண்டியன் நெடுஞ்செழியன், கண்ணகி கதையை மேற்கோள் காட்டினார்; அதேபோல திரெளபதி கதை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இன்று லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஆர் பாலு, கனிமொழி ஆகியோர் பேசிய ஒவ்வொன்றுக்கும் வரிக்கு வரி பதிலளித்தார்.
செங்கோல் குறித்து பேசுகையில், காங்கிரஸ்தான் செங்கோலை தூக்கி எறிந்து மூலையில் போட்டது- அதனை மீட்டு உரிய இடத்தில் நிலைநாட்டியவர் பிரதமர் மோடி என்றார். அத்துடன் சிலப்பதிகாரம், திராவிடத்தை மறுக்கிறது; அந்தணர் எதிர்ப்பை மறுக்கிறது என்பதற்கு ம.பொ.சி.யின் பேச்சை மேற்கோள் காட்டினார் நிர்மலா சீதாராமன்.
தமிழர் பாரம்பரியம், பண்பாடு தொடர்பாக பேசுகையில் காசி தமிழ் சங்கமம், தமிழர் புத்தாண்டு கொண்டாட்டங்களை சுட்டிக்காட்டினார். மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காட்டு மிராண்டித்தனம் என சொல்லி தடை செய்தது காங்கிரஸ்; அதனை மீட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றார்.
இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கக் கூடாது என நீங்கள் திணிக்கிறீர்கள்; அதை வளர்க்க மற்றவர்களுக்கு அதிகாரம், திணிப்பு இருக்க கூடாதா என்றார்.
1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த கட்சி திமுக இன்று திரெளபதி கதை பற்றி பேசலாமா எனவும் அன்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி விமர்சித்தார் நிர்மலா சீதாராமன்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசால் கடன் வாங்கி கட்டப்படுகிறது; தமிழ்நாடு அரசுக்கு ஒரு சுமையும் இல்லை என்றும் விவரித்தார் நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமானின் ஒவ்வொரு விளக்கத்துக்கும் திமுக, காங்கிரஸ், என்சிபி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிநடப்பும் செய்தனர். இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications