புதிய நாடாளுமன்றத்திற்கு புதிய பெயர் சூட்டிய மோடி.. என்ன அர்த்தம் தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்ற பழைய கட்டிடத்தை சம்விதான் சதன், அதாவது அரசியலமைப்பு இல்லம் என்று அழைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உரையில் தெரிவித்து உள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் பிரதமர் மோடி உரையை நிறைவு செய்துவிட்டு அனைத்து எம்பிக்களுடன் புதிய நாடாளுமன்றத்திற்கு சென்றார். இன்று மதியம் புதிய நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நடைபெற்றது.

முன்னதாக நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று, இங்கிருந்து நாம் விடைபெற்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்கிறோம். விநாயக சதுர்த்தி நாளான இது மங்களகரமானதாகும்." என்று கூறினார். அதை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்களை நோக்கி பேசிய அவர், "நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் சிந்தித்துப் பார்த்த பிறகு அதைக் கருத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போது நாம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு செல்கிறோம் என்பதால், இந்த அவையின் பெருமை ஒருபோதும் குறையக்கூடாது. நாம் இதை பழைய நாடாளுமன்றம் என்று மட்டும் அழைக்கக்கூடாது. நீங்கள் இருவரும் அனுமதித்தால், இந்தக் கட்டிடத்திற்கு 'சம்விதான் சதன்' என்று பெயரிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். (சம்விதான் சதன் என்றால் அரசியலமைப்பு இல்லம் என்று பொருள்)
எப்போதும் நமக்கு அது உத்வேகமாக இருக்கும். 'சம்விதான் சதன்' என்று நாம் அதை அழைக்கும்போது, ஒரு காலத்தில் இங்கு அரசியலமைப்பு நிர்ணய சபையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர்களின் நினைவுகள் அதோடு இணைக்கப்படும். இந்த வாய்ப்பை நாம் கைவிடக் கூடாது. இந்த அரிய பரிசை நான் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்குவோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது இந்தப் பழைய நாடாளுமன்ற கட்டிடம். இது 1927 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 6 ஆண்டுகள் நடைபெற்று உள்ளன.
இக்கட்டிடத்தில் இம்பீரியல் ஆட்சி கவுன்சில் செயல்பாடு நடைபெற்றதால் அப்போது இம்பீரியல் பில்டிங் என்றே அழைக்கப்பட்டது. ரூ.8.30 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பழைய நாடாளுமன்றம் 70 அடி உயரம், 560 அடி அகலம் கொண்டதாகும். இதில் உள்ள 144 பிரமாண்ட துாண்கள் இதற்கு மேலும் அழகூட்டின. இந்தக் கட்டிடம் இடிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற தேவைகளுக்காகவே புனரமைப்பு செய்து பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications