ஆஹா.. மோடியிடம் இருந்து இப்படி ஒரு பிறந்த நாள் வாழ்த்து.. அதுவும் தமிழில்.. ப சிதம்பரத்துக்குத்தான்
டெல்லி: திஹார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கடிதம் அனுப்பி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் பண மோசடி தடுப்பு சட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் கோரிக்கைகள் நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக டெல்லி திஹார் சிறையில் தான் இருக்கிறார் செப்டம்பர் 16ம் தேதி ப சிதம்பரத்திற்கு பிறந்த நாள் ஆகும். அன்றைய நாளிலும் ப சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் தான் இருந்தார். இன்று வரை திஹார் சிறையில் தான் ப சிதம்பரம் இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி செப்டம்பர் 16ம் தேதி ப சிதம்பரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அவர் தனது கடிதத்தில், உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும் என கூறியுள்ளார்.
@PMOIndia @narendramodi என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி. pic.twitter.com/HGbWnkCrim
— P. Chidambaram (@PChidambaram_IN) 24 September 2019
இந்த கடிதம் ப சிதம்பரத்தின் காரைக்குடி வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அப்போது தான் கடித விவகாரம் தெரியவந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications