பிரதமரின் அமைதி அவமானம்.. ராணுவத்தினர் பாஜகவின் காவலாளி அல்ல, நாட்டை காப்பவர்கள் - ராகுல் காந்தி
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களுக்கு முடிதிருத்தம், சலவை, கார் ஓட்டுநர், எலெக்ட்ரிஷியன் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்க்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பாஜக தலைவர் சர்ச்சை கருத்து
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, ‛‛அக்னிபாத் ஒரு நல்ல திட்டம். அக்னி வீரராக 4 ஆண்டுகள் பாதுகாப்பு படையில் இருக்கலாம். பணியிலிருந்து அவர்கள் வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படும். அக்னிவீர் பட்டயமும் வழங்கப்படும். ஒருவேளை பாஜக அலுவலகத்தில் காவலாளர் பணிக்கு ஆள் தேவைப்பட்டால் நான் அக்னிவீரர்களுக்கே முன்னுரிமை அளிப்பேன்'' என்றார்.

ராகுல் காந்தி கண்டனம்
இதனை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, "விடுதலை பெற்று 52 ஆண்டுகள் மூவர்ணக் கொடியை ஏற்றாதவர்கள், ராணுவ வீரர்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆர்வம் உடையவர்கள், பாஜக கட்சியை காக்க வந்த காவலாளி அல்ல, நாட்டைக் காக்க வந்தவர்கள். பிரதமரின் இந்த அமைதி இந்த அவமானத்தை ஒப்புக் கொள்வதற்கு சமம்." என்று விமர்சித்துள்ளார்.

ஏன் இந்த அக்னிபாத்?
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

கொந்தளித்த இளைஞர்கள்
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகார், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். பல இடங்களில் பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஏன் எதிர்ப்பு?
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் இந்த திட்டம் இளைஞர்களை முட்டாள்களாக்குவதாகும் என இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications