ஈரான் - இஸ்ரேல் போருக்கு இடையே.. மோடி சத்தமின்றி செய்த சம்பவம்.. துருக்கிக்கு இந்தியா வைத்த ஆப்பு
டெல்லி: ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரம் அடைந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சத்தமின்றி ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ உடன் இணைந்து பிரதமர் மோடி நிகோசியா அருகே உள்ள மலைப் பகுதிகளை பார்வையிட்டார். இந்த பகுதியில் புகைப்படம் எடுத்து அவர் இணையத்திலும் வெளியிட்டார். இப்பகுதி 1974 முதல் துருக்கியின் ஆக்கிரமிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சைப்ரஸ், துருக்கியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஒரு மத்திய கிழக்கு நாடாகும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் துருக்கிக்கு பெரிய மெசேஜ் கொடுக்கும் விதமாக மோடி சத்தமின்றி இந்த சம்பவத்தை செய்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளின் விவகாரங்களில் தலையிடும் துருக்கிக்கு பதிலடி தரும் விதமாக துருக்கி ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளின் முன் புகைப்படம் எடுத்து.. அந்த பகுதிகள் பற்றி சைப்ரஸ் நாட்டுடன் ஆலோசனை செய்து மோடி அதிரடி காட்டி உள்ளார்.
இரு நாடுகளின் உறவு
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடியை சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ வரவேற்றார். மேலும், நாட்டின் உயரிய சிவிலியன் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மக்காரியோஸ் III விருதை வழங்கி கௌரவித்தார். இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் நிகோசியா அருகே உள்ள மலைகளைப் பார்வையிட்டனர். இப்பகுதி 1974 முதல் துருக்கியின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
சைப்ரஸ் மற்றும் துருக்கி இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் பிராந்திய மற்றும் அரசியல் மோதல்களே இதற்குக் காரணம். 1974ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து துருக்கி இந்த தீவை ஆக்கிரமித்தது.
1974 ஜூலையில், கிரீஸ் ராணுவ ஆட்சிக்குழு சைப்ரஸை கிரீஸுடன் இணைக்க திட்டமிட்டது. இதற்கு பதிலடியாக, துருக்கி சைப்ரஸில் இருந்த துருக்கிய குடியுரிமை மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் துருக்கியை கைப்பற்ற நினைத்தது. இதனால் துருக்கி சைப்ரஸ் தீவின் மீது படையெடுத்தது.
துருக்கியப் படைகள் சைப்ரஸ் தீவின் வடக்குப் பகுதியை கைப்பற்றி சுமார் 37% ஆக்கிரமித்தது. அப்போதிலிருந்து இப்பகுதி துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்கு பகுதி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சைப்ரஸ் குடியரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. வடக்கு பகுதி துருக்கிய குடியரசால் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆனால் இதனை துருக்கி மட்டுமே அங்கீகரிக்கிறது.
சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் மத்திய தரைக்கடல் பகுதியில் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான சைப்ரஸுக்கும் துருக்கிக்கும் இடையே இதனால் மோதல் உச்சம் அடைந்து உள்ளது.
துருக்கி பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆயுத உதவி செய்ததோடு அரசியல் ரீதியாகவும் துருக்கி ஆதரவு அளித்தது. சைப்ரஸ், துருக்கியுடன் பிராந்திய எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது. 1974 இல் துருக்கி சைப்ரஸை ஆக்கிரமித்து அதன் வடக்கு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஒரு பக்கம் இந்தியாவை எதிர்க்கும் நிலையில்.. காஷ்மீர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் போன்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சைப்ரஸ் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதன் மூலம் துருக்கிக்கு செக் வைக்க முடியும் அதேபோல் சைப்ரஸ் நெருக்கமானால் ஐரோப்பாவிற்கும் நெருக்கமாக முடியும்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சித் தலைவர்
சைப்ரஸ் 2026 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சித் தலைவர் பதவியை வகிக்க உள்ளது. பிரதமரின் இந்த பயணம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை ஆழமாக்க உதவும்.
இன்று பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் மாளிகையில் வரவேற்கப்படுவார். சைப்ரஸிலிருந்து, மோடி இன்று கனடாவுக்கு ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் புறப்படுகிறார். பிரதமரின் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் கடைசி கட்டமாக குரோஷியாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் அதிபர் ஜோரான் மிலானோவிச் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் ஆகியோரைச் சந்திக்கிறார்.
23 வருடங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications