மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பிய ஜனாதிபதி விசிட்.. பாஜக vs மம்தா பானர்ஜி இடையே வார்த்தை யுத்தம்
டெல்லி: மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை அம்மாநில அரசு அவமதித்து விட்டதாகவும், இப்படியான ஒரு நிகழ்வு இதுவரை நடைபெற்றதே இல்லை என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட்டும் வரும் மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்காத மம்தா பானர்ஜி அரசு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் சாந்தால் மாநாடு நடைபெற்றது. இதில் திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முதலில் பிடாநகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி கோஷிபுர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், பழங்குடியின மக்கள் அதிகம் பேர் இதில் பங்கேற்கவில்லை.
இதனைக் கவனித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏன் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது? என் மீது மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளாரா? மம்தா பானர்ஜியோ அல்லது அமைச்சரவை சகாக்களோ என்னை வரவேற்க வரவில்லையே என்று சுட்டிக்காட்டி பேசினார்.
வெட்கக் கேடானது என மோடி கோபம்
இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- "இது வெட்கக்கேடானதும், இதுவரை நடைபெறாத ஒரு சம்பவமும் ஆகும். ஜனநாயகத்தையும் பழங்குடியினர் சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதையும் நம்பும் அனைவரையும் இன்று நடைபெற்ற சம்பவம் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত।
— Narendra Modi (@narendramodi) March 7, 2026
জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা… https://t.co/XGzwMCMFrT
பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் குடியரசுத்தலைவரும் வெளிப்படுத்தியிருக்கக் கூடிய வேதனையும் மனவேதனையும் இந்திய மக்களின் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் அரசு உண்மையிலேயே அனைத்து வரம்புகளையும் கடந்து விட்டது. குடியரசுத்தலைவருக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்புக்கு அந்த மாநில அரசின் நிர்வாகமே பொறுப்பாகும்.
பதவியின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்
மேலும், சாந்தால் கலாசாரம் போன்ற மிக முக்கியமான விஷயத்தை மேற்கு வங்காள அரசு இவ்வளவு அலட்சியமாக கையாள்வது மிகவும் வருத்தத்துக்குரியது. குடியரசுத்தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு உயர்ந்த பதவியாகும். அந்தப் பதவியின் கண்ணியம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசு மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இதை உணர்ந்து செயல்படும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி விளக்கம்
சிலிகுரி விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வரவேற்க அரசியல் தரப்பில் இருந்த ஒரே பிரதிநிதி சிலிகுரி மேயர் மட்டுமே ஆவார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் வருகையை சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி மரபு மீறப்பட்டது என்ற குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி நிராகரித்தார். மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறுகையில், "குடியரசுத் தலைவர் அலுவலகம் அனுமதித்த விதிகளின்படியே அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சிலிகுரி மாநகராட்சி மேயர், டார்ஜிலிங் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் குடியரசுத்தலைவரை வரவேற்றனர்" என்றார். இதற்கிடையே, மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரிடம் இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
சர்ச்சை எழுந்தது ஏன்?
குடியரசுத்தலைவர் பங்கேற்ற இருந்த நிகழ்ச்சியின் இடம் மாற்றப்பட்டதே இந்த சர்ச்சைக்கு பிரதான காரணமாக அமைந்தது. பிதாநகரில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியை டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள கோசையபூர் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. மைதானம் மாற்றப்பட்டதால் பலரால் வரமுடியவில்லை என்று குடியரசுத்தலைவர் கூறியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நான் வடக்கு வங்கம் வந்தபோது முதலமைச்சர் அல்லது அமைச்சரவையில் இருந்து யாரும் என்னை வரவேற்க வரவில்லை. அதனால் மம்தா பானர்ஜி என்னிடம் கோபமாக உள்ளாரா என்று தெரியவில்லை. தானும் வங்காளத்தின் மகளாகவே கருதப்படுகிறேன். மம்தா பானர்ஜி தன்னுடைய தங்கை போன்றவர்.
சாந்தால் மாநாடு நடைபெற இருந்த இடம் மாற்றப்பட்டதையும் அவர் கேள்வி எழுப்பினார். முதலில் இந்த நிகழ்ச்சி பித்நகர் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் அது கோஷிபூர் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார். அந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என்றும், அங்கு மக்கள் வருகை குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய திரவுபதி முர்மு ’அருகில் பரந்த திறந்த வெளிகள் இருப்பதை பார்த்தபோது, இந்த நிகழ்ச்சியை அங்கேயே நடத்தி இருந்தால் மிகப் பெரிய அளவில் மக்கள் கூட முடிந்திருக்கும்’ என்று கூறினார். "இந்த நிகழ்ச்சி இங்கே நடத்தப்பட்டிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். இந்த பகுதி மிகவும் பரந்தது. இங்கே எளிதாக ஐந்து லட்சம் பேர் கூடலாம்," என்று அவர் தெரிவித்தார்.மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பிய பலர் நிகழ்ச்சி நடைபெறும் இடம் தூரமாக இருந்ததால் வர முடியாமல் போனது தன்னை மிகவும் வருத்தமடையச் செய்ததாகவும் திரவுபதி முர்மு கூறினார்.
அறிக்கை கேட்ட உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகமும் குடியரசுத் தலைவர் வருகையின் போது மரபுகளை கடைபிடிக்காதது தொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகமும் அறிக்கை கோரியுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. அதாவது, ஜனாதிபதியை வரவேற்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படாதது, சந்தால் நிகழ்ச்சி நடைபெறும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரம், பயண பாதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவரது பயணத்தின் போது செய்யப்பட்ட பிற ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?
மேலும், மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள், முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர், குடியரசுத் தலைவர் வருகை மற்றும் புறப்பாட்டின் போது ஏன் இல்லை என்பதற்கும் விளக்கம் கோரியுள்ளது. அதோடு, குடியரசுத் தலைவர் பயணத்தின் போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதுமான வசதிகள் இல்லாதது மற்றும் பயண பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக குறைபாடுகளையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த குறைபாடுகள் தொடர்பாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியர், சிலிகுரி போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டு, எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் மத்திய அரசு கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்சைகளுக்கு மம்தா விளக்கம்
இந்த சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்த மம்தா பானர்ஜி, மற்ற மாநிலங்களில் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களின் போது, ஏன் இதுபோன்ற எதிர்ப்புகள் எழவில்லை எனவும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications