இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு.. ஆலோசித்தது என்ன?
டெல்லி: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இங்கிலாந்து பிரதமராக ;பொறுப்பேற்று ரிஷி சுனக் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். குறிப்பாக மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல் குறித்தும் பேசிய தலைவர்கள், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினர்.

மேலும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரால் அப்பாவி மக்கள் பலியாவது குறித்தும் இருதலைவர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பேசினேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
மேற்கு ஆசியாவில் உள்ள நிலமை குறித்து எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். அப்பாவி மக்கள் உயிர் பறிபோவது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும். பிரந்திய அமைதி மற்ற்றும் நிலைத்தன்மை, பாதுகாப்பு தொடர்பாக பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பேசினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications