கொரோனா பரவலைத் தடுக்க ஒரே ஒருவழி தடுப்பூசி போடுவது மட்டுமே.. பிரதமர் மோடி
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஒருவழி கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதுதான் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலையுடனான 24 மணிநேர நிலவரப்படி நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,47,417.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,17,531. மொத்த கொரோனா பாதிப்பில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 3.08 சதவீதமாக உள்ளது. மேலும் நேற்று 84,825 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,47,15,361 என அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 95.59 சதவீதம். கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 13.11 சதவீதம் ஆகும். கொரோனா வாராந்திர பாதிப்பு விகிதம் 10.80 சதவீதம் ஆகும். தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 154.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

அதிகரிக்கும் ஓமிக்ரான் பாதிப்பு
இதுவரை மொத்தம் 69.73 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஓமிக்ரான் தொற்று 5,488 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2,162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,367 பேருக்கும், ராஜஸ்தானில் 792, பேருக்கும், தொற்று ஏற்பட்டு மகாராஷ்டிராவில் 734 பேரும், ராஜஸ்தானில் 510 பேரும், குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி திட்ட செயல்பாடு ஆகியவை தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

ஒரே வழி தடுப்பூசிதான்
முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக மக்களை பாதித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருவிழா காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். வீடுகளில் தனிமைப்படுத்துதல் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை மக்கள் தோற்கடிப்பார்கள்; கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க ஒரேவழி தடுப்பூசி மட்டுமே. தற்போதைய நிலையில் மாநிலங்களிடம் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் விரைவாகப் போடப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications