பாரத் மாதா கி ஜே' சொல்ல கூட வெட்கப்படுகிறார்.. மன்மோகன் சிங் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
டெல்லி: ஒரு சிலர் 'பாரத் மாதா கி ஜே' கூட சொல்ல தயங்குகிறார்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக தாக்கினார்.
கடந்த வாரம் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் பேசுகையில் , தேசியவாத யோசனையும், "பாரத் மாதா கி ஜே" முழக்கமும், இந்தியாவின் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்களையும் குடிமக்களையும் ஒதுக்கி வைப்பதற்காக போர்க்குணமிக்க மற்றும் முற்றிலும் உணர்ச்சிபூர்வமான யோசனையை உருவாக்குவதற்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறினார்.
இந்நிலையில் டெல்லி வன்முறை விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வரும் நிலையில் பாஜக எம்பிக்களை இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது அவர் அமைதி, நல்லிணக்கம், மற்றும் ஒற்றுமையை நாட்டுமக்களிடம் பாஜக எம்பிக்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய மோடி, "'பாரத் மாதா கி ஜே' முழக்கம் சிலருக்கு வசதியாக இல்லை . காங்கிரஸ் தலைவர்கள் தேசியவாத முழக்கத்தை சொல்ல வெட்கப்படுகிறார்கள்.ஜவஹர்லால் நேரு சுதந்திர இயக்கத்திற்குக் கண்டுபிடித்த முழக்கம் இது. சுதந்திர இயக்கத்தின் போது கூட, பாரத மாதா முழக்கத்தைப் பற்றி சிலர் அவ்வாறே உணர்ந்தார்கள்" என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை தாக்கினார்-
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications