துண்டை எடுத்து தலைக்கு மேலே சுற்றிய மோடி.. பாஜக வெற்றி கொண்டாட்டத்தில் பிரதமர் உற்சாகம்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஹேப்பியாகி உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு மலர்தூவி வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் தொண்டர்கள்.. மோடி.. மோடி.. என கோஷமிட்டனர். இதனால் உற்சாகமான மோடி தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பீகாரில் மீண்டும் பாஜகவின் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.

இதனால் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் ஹேப்பியாகி உள்ளனர். நாடு முழுவதும் இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக மோடி வருகை புரிந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மோடியை நோக்கி மலர்தூவி வரவேற்றனர். மேலும் மோடி.. மோடி.. என உற்சாகமாக கோஷமிட்டனர்.
இதனால் உற்சாகமடைந்த மோடி காரை விட்டு கீழே இறங்கினார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அப்போது தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்து மோடி.. மோடி.. என கோஷமிட்டனர். இதையடுத்து மோடி தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து தலைக்கு மேலே உயர்த்தி சுற்றியபடி அங்கிருந்து மேடைக்கு சென்றார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi receives a warm welcome as he arrives at the party headquarters in Delhi
— ANI (@ANI) November 14, 2025
The National Democratic Alliance (NDA) is set to secure a historic win in Bihar#BiharElection2025 pic.twitter.com/8fsAVzM3Pq
இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications