Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்காசியாவில் நிலவி வரும் போர் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் குறித்து பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலையில் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கச்சா எண்ணெய், கேஸ் இருப்பு பற்றியும், புரளி பரவுவதை தடுக்கவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஈரானைத் தாக்கியதால் பிப்ரவரி 28-ல் மேற்கு ஆசியப் போர் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்திருப்பதால், மொத்த மேற்காசியாவும் பதற்றமடைந்திருக்கிறது. போர் எண்ணெய் விநியோகத்தை பாதித்திருககிறது.

narendra modi petrol fuel

இந்தியா கச்சா எண்ணெய் தேவைக்கு, மேற்காசிய நாடுகளைதான் சார்ந்திருக்கிறது என்பதால், போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என்று வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அசாம், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இந்த வதந்தி பரவியதால், பெட்ரோல் பங்குகள் முன்பு கூட்டம் அலைமோதியது. மக்கள் பீதியடைந்து, அதிக அளவில் பெட்ரோலை வாங்கி குவித்திருக்கின்றனர். பெட்ரோல் வாங்க கூடிய கூட்டத்தில் அடிதடிகளும் நடந்திருக்கின்றன.

இப்படி இருக்கையில் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு முன்வந்திருக்கிறது. மேற்கு ஆசியப் போர் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர்களுடன் இன்று மாலையில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் ஆன்லைனில் நடந்தது. அனைத்து முதல்வர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகிய மத்திய அமைச்சர்களும், அமைச்சரவை, வெளியுறவு, உள்துறை, பெட்ரோலியம், பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர்கள் ஆகிய உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 'ஒரே இந்தியா' என்ற உணர்வோடு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கம்.

இந்த கூட்டத்தில் போரால் இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள், கச்சா எண்ணெய், கேஸ் இருப்பு, சிலிண்டர்களின் இருப்பு உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் வதந்திகள் பரப்புவதை தடுக்கவும், ஈரான் போரால் ஏற்படும் அபாயங்களை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர். பிரதமர் மோடி சில முக்கிய அறிவுரைகளை பிறப்பித்தார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால்
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தேர்தல் நடைபெறும் மாநில முதல்வர்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+