மோடி தலைமையில் மாநில தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநில தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 3 வது மாநில தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு இன்று முதல் 29ம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.

மாநிலங்களுடன் இணைந்து விரைவான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்துவது, வேளாண்மையில் தற்சார்பு நிலையை அடைவது போன்றவற்றில் குழுவாக இணைந்து செயல்படுவது குறித்து தலைமை செயலாளர்களின் தேசிய மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

PM Modi to chair third national conference of chief secretaries from December 27-29

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்ற முதல் மாநாடு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் முக்கியமாக தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பல்வகை பயிர்களை பயிரிடும் திட்டம் போன்றவற்றை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இரண்டாவது மாநாடு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 3வது மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களுடன் இணைந்து விரைவான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்துவது, வேளாண்மையில் தற்சார்பு நிலையை அடைவது போன்றவற்றில் குழுவாக இணைந்து செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே ஒத்ழைப்பை பலப்படுத்துவது என்ற முக்கிய நோக்கத்தில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட கலெக்டர்கள், ஒன்றிய அமைச்சரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+