ஐஎஸ்பிஏ: இந்திய விண்வெளி சங்கம்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!
இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்
டெல்லி: இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் இது குறித்து கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐஎஸ்பிஏ என்பது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில்துறை சங்கம் ஆகும்.. இந்தியாவை தற்சார்புமிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாக மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணியில் இருப்பதற்கு இந்த அமைப்பு உதவி செய்கிறது..
விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட திறன்களை கொண்ட முன்னணி உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களை ஐஎஸ்பிஏ பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல, கொள்கை வாதத்தை மேற்கொள்வதோடு, அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் உட்பட இந்திய விண்வெளி களத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இந்த சங்கம் இணைந்து செயல்படும்... தற்சார்பு இந்தியா பற்றிய பிரதமரின் தொலைநோக்கு பார்வையை எதிரொலிக்கும் வகையில், இந்தியாவை தற்சார்பு மிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாக மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணி வீரராக ஆக்க இந்த அமைப்பு உதவும்.
லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மைஇந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் போன்றோர் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.. கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இந்தியா ஆகி போன்ற நிறுவனங்களும் இவற்றின் இதர முக்கிய உறுப்பினர்கள் ஆவார்கள்..
இந்த இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த முக்கிய நிகழ்வில் விண்வெளி துறையின் பிரதிநிதிகளுடன் அவர் உரையாட இருக்கிறார்..
இதுகுறித்து, பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாட்டின் விண்வெளித்துறையின் குரலாக இருக்க விரும்பும் தொழில்துறையினருக்காக இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.. இதன் உறுப்பினர்களாக லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா குழுமம், ஒன்வெப், பார்தி ஏர்டெல் உள்ளிட்டோர் உள்ளனர்.. இவர்கள் விண்வெளித்துறையினர், அரசு, சார்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடியும் ஏற்கனவே ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "விண்வெளி துறையின் பங்குதாரர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தற்காக மகிழ்ச்சி அடைகிறேன்... உலக விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications