தமிழகத்தில் 18.. உலக தரத்தில் மாறும் 508 ரயில்வே ஸ்டேஷன்! அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி! வேறலெவல்
டெல்லி: இந்தியாவில் ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள 18 ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டில் நாட்டினார். இதன்மூலம் இந்த ரயில் நிலையங்கள் புதுப்பொலிவை பெற உள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும், தமிழ்நாட்டில் எந்தெந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ‛வந்தே பாரத்' ரயில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‛வந்தே பாரத்' ரயில்கள் இயங்கி வருகின்றன. அதேபோல் ரயில்வே பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதில் ஒன்று தான் அம்ரித் பாரத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு உலக தரத்துக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மறுவடிவமைக்கப்பட உள்ளது. இதற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் இருந்தபடி அவர் காணொலி காட்சி மூலம் ரயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார். இதன்மூலம் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்தும் பணி என்பது ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற உள்ளது. இன்று அடிக்கல் நாட்டப்படும் இந்த ரயில்வே ஸ்டேஷன்களின் பணிகள் என்பது 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இன்று உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளன. , குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15 மற்றும் கர்நாடகாவில் 13 ஆகும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டத்தில் மொத்தம் 25 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதற்கட்டமாக 18 ரயில் நிலையங்களுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி புனரமைப்பு பணிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். அதன்படி தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது.
இந்த புனரமைப்பு பணியின்போது ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் தொடர்பு முறை, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிகட்டுகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கண்காணப்பு கேமரா பொருத்துதல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications