புத்த பூர்ணிமா.. பிரதமர் மோடி இன்று நேபாளம் பயணம்.. பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புத்த பூர்ணிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் பயணம் மேற்கொள்கிறார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் ட்யூபாவை இன்று லும்பினியில் பிரதமர் மோடி சந்திக்கிறார். பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இரண்டு நாட்டு தலைவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்

இரண்டு நாட்டு உறவு குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் பேச வாய்ப்பு உள்ளது.

மோடி

மோடி

கல்வி, கலாச்சாரம், மின்சாரம் ஆகிய துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம்தான் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் ட்யூபா இந்தியா வந்தார். முதலில் டெல்லி சென்று அரசியல் தலைவர்களை சந்தித்தவர் அதன்பின் வாரணாசி சென்றார். வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாத் கோவிலில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் ட்யூபா வழிபாடு செய்தார்.

Recommended Video

    Modi Nepal Visit | Lumbini Buddha Temple | Oneindia Tamil
    நேபாளம்

    நேபாளம்

    அதேபோல் வாரணாசியில் இருக்கும் லலிதா காட் பகுதியில் உள்ள புஷ்பாஞ்சலி நேபாளி கோவிலில் வழிபாடு செய்தார். அங்கு விதவைகளுக்கான தங்குமிடம் ஒன்றை கட்டிக்கொடுக்க நேபாள பிரதமர் ஷேர் பகதூர் ட்யூபா அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார். புத்த பூர்ணிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொள்கிறார்.

     சீன எல்லை விவகாரம்

    சீன எல்லை விவகாரம்

    சீனாவுடனான எல்லை விவகாரம், கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாளத்துடன் ஏற்பட்ட கசப்பான மோதல்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார். கடந்த மாத டெல்லி சந்திப்பிற்கு பின்பாக இந்த சந்திப்பு நடக்க உள்ளது. பிரதமர் மோடியின் 5வது நேபாள பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாயாதேவி கோவிலில் அவர் சிறப்பு பூஜை செய்ய இருக்கிறார்.

    புத்த ஜெயந்தி

    புத்த ஜெயந்தி

    அதேபோல் புத்த ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேச இருக்கிறார். அதேபோல் புத்த மதத்தினர் சார்பாக கல் வைக்கும் பாரம்பரிய நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். சீனா எப்படியாவது நேபாளத்தை தன் பக்கம் கொண்டு வர பார்க்கிறது. ரோட் அண்ட் பெல்ட் திட்டம் மூலம் நேபாளத்தில் நலத்திட்டங்களை செய்ய சீன முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் இன்றைய பயணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+