உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம்.. தீபாவளியை சிறப்பிக்க பிரதமர் மோடி அழைப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உள்நாட்டு பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம், தீபாவளியை சிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் படைப்பாற்றல் கொண்டாடப்படுகிறது என்றும் மோடி கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டுப்பதாவது, "இந்த பண்டிகைக் காலத்தை, 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைப் போற்றுவதன் மூலம் கொண்டாடுவோம். இந்தியப் பொருட்களை வாங்குவோம், மேலும் 'இது சுதேசி என்று பெருமையுடன் சொல்!' என்று கூறுவோம். நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள். இப்படி செய்வதன் மூலம் மற்றவர்களும், உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவியுங்கள்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.













Click it and Unblock the Notifications