எஸ்400 முன்பு கெத்தாக பிரதமர் மோடி.. ஒரே ஒரு போட்டோவால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த வதந்தியும் காலி
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது நமது தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான், இந்தியா குறித்து பல்வேறு பொய்களையும் வதந்திகளையும் பரப்பியது. அப்படி பாகிஸ்தான் பரப்பிய ஒரு மிகப் பெரிய வதந்தியை இப்போது பிரதமர் மோடியே க்ளோஸ் செய்துவிட்டார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் போக்கு போக்கு நிலவி வந்தது. ஆபரேஷன் சிந்தூரில் நாம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நோக்கித் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை அழித்தோம். ஆனால், அதைப் பொறுக்காத பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தக்கப் பதிலடி கொடுத்ததாலேயே, போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் ஓடி வந்தது.

பல்வேறு பொய்கள்
அதேநேரம் இந்த மோதல் நிலவிய போது பாகிஸ்தான் பல்வேறு பொய்யான தகவல்களை இந்தியாவுக்கு எதிராகப் பரப்பியது. இந்தியாவின் பல்வேறு ராணுவத் தளங்களைக் காலி செய்துவிட்டதாக எல்லாம் பொய்களைப் பரப்பியது. ஆனால், இந்தியாவின் அனைத்து விமானத் தளங்களும் நன்றாகவே இருப்பதாகவும் அடுத்து எப்போது ஆபரேஷன் என்றாலும் தயாராக இருப்பதாகவும் ஏர் மார்ஷல் ஏகே பாரதி விளக்கமளித்தார். அதேபோல பாகிஸ்தான் வீடியோ கேம் காட்சிகளை எல்லாம் பாக். தாக்குதல் எனச் சொல்லிப் பரப்பி வந்தது. அந்தப் பொய் தகவல்களையும் இந்தியா அம்பலப்படுத்தியது.
எஸ் 400 அமைப்பு
அப்படி பாகிஸ்தான் மற்றொரு மெகா பொய்யைப் பரப்பி வந்தது. அதைப் பிரதமர் மோடியே அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது இந்தியாவிடம் இருக்கும் தலைசிறந்த வான் பாதுகாப்பு அமைப்பு எஸ்400. நாம் இதை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியிருந்தோம். எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் அணிவகுப்பு மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போதிலும், எஸ்400 அனைத்தையும் வீழ்த்தியது. ஒரு ட்ரோன் கூட எங்கும் தாக்கவில்லை. அந்தளவுக்கு எஸ்400 வலிமையானது.
அந்த எஸ்400 பாதுகாப்பு அமைப்பைத் தாக்கி அழித்துவிட்டதாக பாகிஸ்தான் இன்னொரு பொய்யைப் பரப்பியது. இணையத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த விஷமிகள் இது தொடர்பாகப் பக்கம் பக்கமாகப் பொய்களை அள்ளி வீசினர். இதற்கிடையே அந்தப் பொய்களையே இப்போது பிரதமர் மோடியே அம்பலப்படுத்தியிருக்கிறார். அவரது ஒரே ஒரு போட்டோ பாகிஸ்தானின் ஒட்டுமொத்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
பிரதமர் மோடியின் போட்டோ
அதாவது பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை திடீரென பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்கு சென்றார். அங்கு ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் கொஞ்ச நேரம் உரையாடினார்.. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு போட்டோவில் பிரதமர் மோடியின் பேக்- கிரவுண்டில் இருந்த விஷயம் தான் மொத்தப் பொய்களையும் அடித்து நொறுக்குவதாக இருந்தது.
அதாவது இந்தியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி எந்த S-400 பாதுகாப்பை அமைப்பை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் கூறியதோ.. அதே எஸ்400 முன்னால் நின்று கொண்டு பிரதமர் மோடி பேசினார். எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு தெளிவாகத் தெரியும்படி அந்த போட்டோ பகிரப்பட்டது. இந்த போட்டோவை இணையத்தில் டிரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள் பாகிஸ்தான் பொய்களில் கடைசியும் முறியடிக்கப்பட்டதாகக் கூறி வருகிறார்கள்.
எவ்வளவு பொய்!
இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின் போது, தனது JF-17 போர் விமானங்களில் ஒன்று பஞ்சாப் ஆதம்பூர் தளத்தில் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறியது. இதை ஏற்கனவே முன்னதாக, விங் கமாண்டர் வியோமிகா சிங் திட்டவட்டமாக நிராகரித்திருந்தார். இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடியும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் எஸ்400 பாதுகாப்பு அமைப்பு பாதுகாப்பாகவே இருப்பதையும் பாகிஸ்தான் பரப்பிய பொய்களையும் பிரதமர் மோடி காலி செய்துவிட்டார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications