டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் 7 கோடி ஃபாலோயர்ஸ்களை கடந்துள்ளது. இதன் மூலம் அதிக ஃபாலோயர்ஸ்ளை கொண்டுள்ள ஆக்டிவ் அரசியல்வாதி என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

நாம் சொல்ல வரும் செய்தி ஒரே நேரத்தில் பல லட்சம் பேருக்குச் சென்று சேர ட்விட்டர் தளம் மிகவும் உதவியாக இருக்கும். இதனால்தான் அரசியல்வாதிகள் அனைவரும் இப்போது ட்விட்டர் தளத்தில் ஆக்டிவாக உள்ளனர்.

அரசியல் தொடங்கி சினிமா வரை இப்போது முக்கிய அப்டேட்கள் பெரும்பாலும் ட்விட்டர் தளத்திலேயே வருகிறது.

30 நிமிடங்கள்.. மிக உன்னிப்பாக கேட்ட மோடி.. பிரதமருடனான மீட்டிங்கில் நடந்தது என்ன?.. பரபர தகவல்கள்! 30 நிமிடங்கள்.. மிக உன்னிப்பாக கேட்ட மோடி.. பிரதமருடனான மீட்டிங்கில் நடந்தது என்ன?.. பரபர தகவல்கள்!

ட்விட்டர் தளம்

ட்விட்டர் தளம்

குறிப்பாக ட்விட்டர் தளத்தின் மூலம் தேர்தல் பிரசாரங்களை எளிதில் முன்னெடுக்க முடியும் என்பதை நம் நாட்டிற்கு முதலில் காட்டியது பாஜக. இப்போதுள்ள மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என அனைவரும் ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் புதியதொரு சாதனையைப் படைத்துள்ளது.

7 கோடி ஃபாலோயர்கள்

7 கோடி ஃபாலோயர்கள்

பிரதமர் மோடியை ட்விட்டர் பக்கத்தை இப்போது 70 மில்லியன், அதாவது ஏழு கோடி பேர் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் அதிக பேர் ஃபாலோ செய்யும் ட்விட்டர் பக்கங்களில் ஒன்றாக இது உள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி முதல்முதலில் கடந்த 2009இல் ட்விட்டர் தளத்தில் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் பிரதமரின் ட்விட்டர் பக்கம் 60 மில்லியன் ஃபாலோயர்களை தொட்டது. இப்போது ஒரே ஆண்டில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்துள்ளது.

அமைச்சர்கள் வாழ்த்து

அமைச்சர்கள் வாழ்த்து

இந்தியாவில் இப்போது அதிக நபர்கள் ஃபாலோ செய்யும் அரசியல்வாதியாகப் பிரதமர் மோடி உள்ளார். உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தை 26.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அதேபோல ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தை 19.4 பேர் பின் தொடர்கின்றனர். பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் 70 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ள நிலையில், இதற்கு பல்வேறு அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

    குஜராத் தேசிய பூங்காவில் துள்ளி குதித்து ஓடும் 3000 புல்வாய் மான்கள்.. சிறப்பு என ட்வீட் போட்ட பிரதமர்
    உலக அளவில்

    உலக அளவில்

    தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 30.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். முன்னாள் அதிபர் டிரம்பை 88.7 மில்லியன் பேர் பின் தொடர்ந்தனர். இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்திற்குப் பிறகு, அவரது ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவிலும் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட ஆக்டிவ் அரசியல்வாதி என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார். தற்போது அரசியல் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் அதிபர் ஒபாமா அதிகபட்சமாக 129.8 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார்.

    English summary
    Prime Minister Narendra Modi achieved 70 million followers in his Twitter handle. PM Modi is now one of the most followed active politicians on Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X