நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்ய கதி சக்தி திட்டம்.. மிக விரைவில்.. பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும் கதி சக்தி திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.
Recommended Video
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வீர வணக்கம் செலுத்தினார். அப்போது விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின. முன்னதாக ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் 8 ஆவது முறையாக சுதந்திர தின விழாவில் உரையாற்றுகிறார். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சுதந்திரத்தை பெற்று தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். நாட்டை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுக் கூர்கிறேன்.

பங்கேற்பு
கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்கள். ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாறு படைத்தது மிகப் பெரிய விஷயமாகும். நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் கடும் துயரை அனுபவித்தனர். இந்த வேதனையை இன்னும் நான் உணர்கிறேன். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகிலேயே நம் நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 50 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்துவிட்டது.

கடைக் கோடி
உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்துவிட்டது. கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. நகரம், கிராமம் என்றில்லாம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம். மின் இணைப்பு , ஓய்வூதியம், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை கடைக் கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

4 கோடி மக்களுக்கு குடிநீர்
கடந்த இரு ஆண்டுகளில் 4 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் சாலை, 100 சதவீதம் வங்கிக் கணக்கு என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் ஒரு சிலரை கூட சென்றடையாமல் போகும் அவல நிலை இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை அளிப்பது அரசின் முக்கிய பணியாகும். மக்கள் மருந்தகம் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துங்கள் வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நல்ல சத்தான அரிசி வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு திட்டத்தை சமீபத்தில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் , லடாக் உள்ளிட்ட பகுதிகளில் மலை சாதியினர் வாழும் பகுதிகளை தகவல் தொடர்பால் இணைக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் சுற்றுலா, சாகச சுற்றுலா, பனைமரத் தோப்புகள் ஆகியவற்றை வளர்க்க தனி கவனம் செலுத்தப்படும். ஆழ்கடல் பரிசோதனை மூலம் புதிய வளங்களை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

வளர்ச்சி பணிகள்
நாட்டில் 110 பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஒரு சந்தையை உருவாக்கம் டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவி செய்யும். நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் விஞ்ஞானிகள் முனைப்போடு பணியாற்றி வருகிறார்கள். காய்கறிகள், தானியங்கள் உற்பத்தியில் விஞ்ஞானிகளின் உதவி கிடைத்து வருகிறது. சிறு விவசாயிகளை மனதில் கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

சூரிய சக்தி
கடன் அட்டைகள் வழங்குதல் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பெருமையின் சின்னமாக சிறு விவசாயிகள் மாற வேண்டும் என விரும்புகிறோம். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் நமது பழம் பெருமைகளை பாதுகாக்க வேண்டும். உலகத் தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய நாம் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். உலக நாடுகளோடு நாம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் திறமையான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். குடிநீர் வழங்குதல் போன் பல மக்கள் நலத் திட்டங்களில் வநேகமாக நமது இலக்குகளை எட்டியிருக்கிறோம். நாட்டின் ரயில்வே துறையும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

சுதந்திர தினக் கொண்டாட்டம்
அம்ருத் மகோத்ஸவம் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினம் வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக தடைக்கற்களைத் தாண்டி செல்லும் வகையில் மிகப் பெரிய திட்டம் வரப்போகிறது. நம்முடைய தொழில்துறை உலக நாடுகளுடன் போட்டியிட இந்த திட்டம் உதவி செய்யும். கதி சக்தி என்ற இந்த வேகமான திட்டம் நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்யும். நம்நாட்டில் இருந்து செல்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தயாரிப்புகள் தரம்
நம் தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே நாட்டின் பெருமை உள்ளது. நாட்டின் புதிய தொழில்முனைவோரை உலகின் மிகப் பெரிய தொழில் துறையினராக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். 100 லட்சம் கோடி ரூபாயில் இந்த கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்க போகிறது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏராளமானவர்களை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் பரிசோதனையில் உள்ளது. போர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications