குஷியான மோடி.. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட்
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து அனைத்து கட்சித் தலைவர்களும் வருகை தந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டு உள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக அரசின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் 10 மாதங்களே உள்ளன.

இந்த நிலையில் 2024 லோக் சபா தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போதே இறங்கிவிட்டன. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் போட்டியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முதல் கூட்டம் நடைபெற்றது. அதில்
அனைத்து கட்சிகளும் ஓரணியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை என அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் அதே நாளான இன்று டெல்லியில் தங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டுகிறது. இதற்காக பெரிய கட்சிகள் மட்டுமின்றி சிறிய சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதற்காக டெல்லி சென்று உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, பாமக, புதிய தமிழகம், ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்து உள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சித் தலைவர்களை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தலைநகர் டெல்லிக்கு நாடு முழுவதிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்துள்ளது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த கூட்டணி நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும்." என்று குறிப்பிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications