நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 4ஆம் கட்ட தேர்தல்.! ஆர்வம் காட்டும் மக்கள்..அழைப்பு விடுத்த மோடி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் தற்போது ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட 96 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப் பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல்: 9 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்திலுள்ள 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. மேலும் ஒடிசாவில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை பொருத்தவரை ஆந்திராவில் 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளுக்கும், பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகள் நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
4ஆம் கட்ட தேர்தல்: இவை மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் நான்கு தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகளுக்கும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகள் நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்களிக்க ஆர்வம்: காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெண்கள் வாக்களிக்கின்றனர். மேலும் வயதானவர்கள் இளம் தலைமுறை வாக்காளர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை பார்க்க முடிகிறது.
लोकसभा चुनाव के चौथे चरण में आज 10 राज्यों और केंद्र शासित प्रदेशों की 96 सीटों पर मतदान हो रहे हैं। मुझे विश्वास है कि इन सभी सीटों पर लोग भारी संख्या में मतदान करेंगे, जिसमें युवा और महिला वोटर बढ़-चढ़कर हिस्सा लेंगे। आइए, अपने कर्तव्य को निभाएं और लोकतंत्र को मजबूत करें!
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
பிரதமர் மோடி: இந்த நிலையில் தேர்தலில் மக்கள் ஜனநாயக கடமை ஆற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”இன்று நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பெருமளவில் திரண்டுவந்து வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன். வாருங்கள் நாம் நம் கடைமையைச் செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications