இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம்.. சர்வ மத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் மோடி
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்வ மத பிரார்த்தனைகளுடன் திறந்து வைத்து இருக்கிறார்
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய நாடாளுமன்றம் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதனை பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக இன்று காலை 7.15 க்கு புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வருகை தந்தார்.

7.30 மணியளவில் ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கர்நாடகாவின் சிங்மங்களூரு சிருங்கேரி மடம் சார்பில் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க 40 ஆதீனங்கள் டெல்லிக்கு சென்று இருக்கும் நிலையில் அவர்கள் மந்திரங்களை ஓதினர். அவர்களுக்கு பிரதமர் மரியாதை செய்தார்.
ஒரு மணி நேரம் இந்து மத வழக்கப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று சம்பிரதாயப்படி நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி மக்களவை சென்று செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். இந்த செங்கோல் நேற்று மதுரை ஆதீனத்தால் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திருஞான சம்பந்தரின் கோளறு பதிகம் உள்ளிட்ட பாடல்களும் இசைக்கப்பட்டன.
தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்ற ஆதீனங்களை கவுரவிக்கும் வகையில் நேற்று மாலை பிரதமர் மோடி இல்லத்தில் சிறப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செங்கோல் நிறுவப்பட்ட பிறகு இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம் உள்ளிட்ட பல மதங்களின் சார்பில் சுமார் 30 நிமிடங்கள் சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றன. 2020 நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிலும் இதேபோல் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.
பிற்பகல் 12 மணியளவில் நாடாளுமன்ற தொடக்க நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்க இருக்கிறது. மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண சிங் இதில் உரையாற்றுகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீன் தன்கரின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்படுகின்றன. இந்த விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications