பிரதமர் மோடியை சந்தித்த ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள்.. விழாவுக்கு அழைப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சந்தித்து பேசினர். அப்போது நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.
நம் நாட்டில் சத்ய சாய் பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் மறைந்த நிலையில் அவர் உருவாக்கிய ஸ்ரீ சத்ய சாய் பாபா மத்திய அறக்கட்டளை தொடர்ந்து தொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை மூலமாக ஆன்மிக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்ற மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் சேவையாற்றி வருகிறது. ஏழைகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் இந்த அறக்கட்டளை நிறைவேற்றி கொடுக்கிறது.
இந்நிலையில் தான் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குழுவினர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் ஆர்ஜே ரத்னாகர், அறங்காவலர்கள் நீதிபதி வி ராமசுப்பிரமணியன், ரியுகோ ஹிரா, எஸ்எஸ் நாகானந்த், அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்ட்யா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷாண் ரெட்டி உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி, சத்ய சாய்பாபாவுடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்த அறங்காவலர்கள் பிரதமர் மோடியிடம் கூறினர். மேலும் விழாவுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். பிரசாந்தி நிலையம் வந்து சத்யசாய் பாபாவின் ஆசியை பெற விரும்புவதாக மோடி கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications