‘பொயட்டு’ பிரதமர்.. மோடி எழுதிய பாடல்கள் அடுத்தடுத்து ரிலீஸ்! யூடியூபை தெறிக்க விடுதே!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கவிதைகளை எழுதும் ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தற்போது பிரதமர் மோடியின் வரிகளில் உருவான பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய கவிதைகளை 'மன் கி பாத்' உரையின்போது அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமர் மோடி பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரிகள் தற்போது பாடல் ஆகியிருக்கிறது.

நாட்டின் கலாச்சாரம் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதனை பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி கார்போ என்ற தலைப்பில் பாடி வெளியிட்டுள்ளார். தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ள இந்தப் பாடலை இயக்குனர் நதீம் ஷா இயக்கியுள்ளார்.
நவராத்திரி விழாவுக்காக நாட்டின் கலாச்சாரம், பன்முகத் தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாடலை எழுதினார். பாடல் வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் நரேந்திர மோடி எழுதினார். இந்நிலையில் அந்தப் பாடலுக்கு இசையமைத்து வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளது.

190 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல், கார்போ என்ற தலைப்பு உடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தப் பாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறுகையில், "இந்தப் பாடல் எனக்கு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும். கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பா பாடலை என்னால் எழுத முடிந்தது." என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி எழுதிய பாடல் பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கர்பா வகை பாடலான அது 'மாடி' என்ற தலைப்புடன் நவராத்திரி ஸ்பெஷலாக இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications