Vande Mataram Debate: பாரதி பாடலை பாடிய மோடி.. ''தாயின் மணிக்கொடி பாரீர்...'' நாடாளுமன்றத்தில் பிரதமரின் தரமான சம்பவம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் "வந்தே மாதரம்" கீதத்தின் 150வது ஆண்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் இது தொடர்பாக உரையாற்றினார். வந்தே மாதர பாடல் தான் நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாக குறிப்பிட்டார். மேலும், அப்போது பாரதி எழுதிய தாயின் மணிக்கொடி பாரீர் பாடலையும் பாடினார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பித்தது. கடந்த வாரம் பெரும்பாலான நாட்கள் அவை முடக்கப்பட்டது. சார், டெல்லி காற்று மாசு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். அவையையும் முடக்கினர்.

வந்தே மாதரம்
இந்தச் சூழலில் தான் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் "வந்தே மாதரம்" கீதத்தின் 150வது ஆண்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸின் ஒரு முக்கிய கோஷமாக இருந்த இப்பாடலை, இப்போது ஆளும் பாஜக கையில் எடுத்துள்ளது. இந்தச் சூழலில் தான் வந்தே மாதரம் குறித்த விவாதம் இன்று நடைபெறுகிறது.
விவாதம்
இந்த விவாதத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார்கள். சமீபத்தில் தான்'வந்தே மாதரம்' பாடலை 'ஒற்றுமைக்கும் தைரியத்திற்கும் ஒரு மந்திரம்' என்று பிரதமர் மோடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் வந்தே மாதரம் குறித்த விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலா பத்து மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் பிரதமர் மோடி பேசிய நிலையில், ராஜ்யசபாவில் நடைபெறவுள்ள விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார்.
பிரதமர் மோடி
"வந்தே மாதரம்" பாடல் குறித்து லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி, "வந்தே மாதரம் என்பது ஒற்றுமைக்கும் தைரியத்திற்குமான ஒரு மந்திரம். வந்தே மாதரம் என்பது சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றல், உத்வேகம், தியாகம் ஆகியவற்றுக்கான பாதையைக் காட்டிய ஒரு மந்திரம், ஒரு கோஷம். இந்த கீதம் 150 ஆண்டுகளைக் காண்பது நமக்குப் பெருமையான விஷயம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.
இந்தாண்டு தான் நமது அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்த நாளையும் நாம் இப்போது கொண்டாடுகிறோம். குரு தேக் பகதூர் ஜியின் 350வது தியாக தினத்தையும் நாம் கொண்டாடுகிறோம். இவற்றுடன் இப்போது வந்தே மாதரம் 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம்.
காங்கிரஸ் மீதும் பாய்ச்சல்
வந்தே மாதரம் கீதம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளைக் கடந்து, நெருக்கடி நிலை இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு இருண்ட காலகட்டத்தில் நாம் இருந்தோம். சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த பாடல் அப்போது துரதிருஷ்டவசமாக அத்தகைய சூழலை எதிர்கொண்டது.
இப்போது வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தச் சந்தர்ப்பம், நமது கடந்த காலத்தின் பெருமையைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருகிறது" என்றார். மேலும், வந்தே மாதரம் போல நாட்டின் பல பகுதிகளில் தேச பக்தியை ஊட்டும் பாடல்கள் எழுதப்பட்டது என்றும் அவையே விடுதலைப் போராட்டத்தைத் தூண்டியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாயின் மணிக்கொடி
மேலும், "ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி மிகப் பெரிய சுதந்திர உணர்வை வஉ சிதம்பரம் பிள்ளை வெளிப்படுத்தினார். அதேபோல தமிழ் மொழியில் கவிதைகள், பாடல்களை எழுதி சுப்பிரமணிய பாரதி ஆங்கிலேயர்களைக் கலங்கடித்தார்" என்று சொன்னார். அப்போது பாரதியின் தாயின் மணிக்கொடி பாரீர் பாடலையும் அவர் லோக்சபாவில் பாடினார்.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications