அடேங்கப்பா.. 71,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. ரோஜ்கர் திட்டத்தில் பணி நியமனம்.. அசத்திய பிரதமர் மோடி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ரோஜ்கர் மேளா மூலம் வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று ஒரேநாளில் மட்டும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் தற்போது வேலையிழப்பு நடந்து வருகிறது. பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தற்போதைய சூழலில் தனியார் நிறுவனங்களில் வேலை உறுதி தன்மை என்பது சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு விதிவிலக்காக தான் பல இளைஞர்கள், இளம்பெண்கள் அரசு வேலை பெறுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகின்றனர்.மேலும் மத்திய, மாநில அரசு பணிகளை பெறுவதற்கான போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றியும் பெறுகின்றனர்.
இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். ரோஜ்கர் மேளா மூலம் இந்த திட்டம் நிறைவற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதன் தொடர்ச்சியாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
ரயில்வே, போலீஸ், தபால் துறை, வருமான வரித்துறை உள்பட பல்வேறு துறைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடியிடம் இருந்து பெற உள்ளனர். அதன்பிறகு மத்திய அரசு பணி பெறும் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‛‛இந்த புனிதமான பைசாகி நாளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் நேற்று 22,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் ஆத்மநிர்பர் திட்டம் நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஸ்டார்ட்அப்கள் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளன'' என பிரதமர் மோடி பேசினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications