பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் குஜராத் பயணம்! ரூ280 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தின் ஏக்தா நகரில் இன்று ரூ.280 கோடிக்கும் மேலான மதிப்புடைய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே அவர் உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குஜராத் மாநிலம் வதோதராவில் நாட்டின் முதலாவது தனியார் விமான உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். ஸ்பெயின் பிரதமரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டாடா நிறுவனம் இந்த விமான உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றும் நாளையும் பிரதமர் மோடி மீண்டும் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். குஜராத் ஏக்நா நகரில் ரூ280 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துதல், அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இப்பகுதியில் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தேசிய ஒற்றுமை தினத்தை (அக்டோபர் 31) முன்னிட்டு ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் "தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரத்துக்கான திட்டம்" என்பதாகும். 99-வது பொது அடிப்படைப் படிப்பான ஆரம்ப் 6.0-ல் இந்தியாவின் 16 குடிமைப் பணிகள் மற்றும் பூடானின் 3 குடிமைப்பணிகளில் இருந்து 653 பயிற்சி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
நாளை அக்டோபர் 31 அன்று, தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி , சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்கவைத்து, ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கிறார். இதில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச காவல்துறை, 4 மத்திய ஆயுத காவல்படைகள், தேசிய மாணவர் படை மற்றும் அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 16 அணிவகுப்புக் குழுக்கள் இடம்பெறும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications