70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீடு- தொடங்கி வைத்தார் மோடி!
டெல்லி: தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்குமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இந்த திட்டம் உதவும்.
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

மேலும் ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இது உதவும்.
ஆயுர்வேத நிறுவன 2-ம் கட்ட பணிகள்: நாட்டின் முதலாவது அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதில் பஞ்சகர்மா மருத்துவமனை, மருந்து உற்பத்திக்கான ஆயுர்வேத மருந்தகம், விளையாட்டு மருத்துவப் பிரிவு, மத்திய நூலகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தொழில் காப்பக மையம் மற்றும் 500 இருக்கைகள் கொண்ட அரங்கு ஆகியவை அடங்கும்.
மருத்துவ கல்லூரிகள் திறப்பு: மத்தியப் பிரதேசத்தில் மண்ட்சௌர், நீமுச், சியோனி ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர், மேற்கு வங்கத்தில் கல்யாணி, பீகாரில் பாட்னா, உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் கவுகாத்தி மற்றும் டெல்லியில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்களை அவர் தொடங்கி வைத்தார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவையும், ஒடிஷா மாநிலம் பர்கரில் தீவிர சிகிச்சைப் பிரிவையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவு: மத்தியப் பிரதேசத்தில் ஷிவ்புரி, ரத்லம், காண்ட்வா, ராஜ்கர், மண்ட்சௌர் ஆகிய இடங்களில் ஐந்து செவிலியர் கல்லூரிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 21 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள பல்வேறு வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்கள் ஆகியவை அடங்கும்.
ஈஎஸ்ஐசி மருத்துவமனைகள்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஈஎஸ்ஐசி மருத்துவமனையைத் தொடங்கி வைப்பதுடன், ஹரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத், கர்நாடகாவில் பொம்மசந்திரா,நரசாபூர், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், உத்தரப் பிரதேசத்தில் மீரட், ஆந்திரப் பிரதேசத்தில் அச்சுதபுரம் ஆகிய இடங்களில் ஈஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் சுமார் 55 லட்சம் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு சுகாதார பலன்களை அளிக்கும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications