"டிஜிட்டல் கைது".. மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்.. பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை!
டெல்லி: டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். டிஜிட்டல் மோசடியாளர்களிடம் சிக்கும் போது, 'நிதானியுங்கள், சிந்தியுங்கள், நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் (மனதின் குரல்) நேற்று பேசியதாவது: டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள். மனதின் குரலின் நேயர்கள் பலர் இது குறித்து நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். வாருங்கள், இந்த மோசடிப் பேர்வழிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், இந்த அபாயகரமான விளையாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்களை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதே போல மற்றவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். முதல் தந்திரமான உத்தி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் டெல்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று. இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள். பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும். மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம். “இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”. என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல் ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.
டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள். இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”. அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள். இதன் பிறகு வருவது அடுத்த கட்டம். முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”. எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள். முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம். முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும், இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”. தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நிதானியுங்கள், பிறகு சிந்தியுங்கள், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள், இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும்.
டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அமைப்புகளின் தரப்பிலிருந்து இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான காணொளி அழைப்பு எண்கள் அரசு அமைப்புக்களின் தரப்பிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான சிம் கார்டுகள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் கூட முடக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியைப் புரிந்து வருகின்றன என்றாலும், டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடந்தேறி வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்துக் குடிமக்களும் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். யாரெல்லாம் இப்படிப்பட்ட சைபர் மோசடிக்கு இரையாகி இருக்கின்றார்களோ, அவர்கள் அதிக அளவு மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் #SafeDigitalIndia என்பதைப் பயன்படுத்தலாம். இந்த சைபர் மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள்-கல்லூரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், இதில் அதிக அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். சமுதாயத்தில் அனைவரின் முயற்சிகள் வாயிலாக மட்டுமே நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications