வேலு நாச்சியார் பிறந்தநாள்.. தமிழில் நினைவுகூறிய பிரதமர் மோடி
டெல்லி: வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன் எக்ஸ் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், 'துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்' என்று கூறியுள்ளார்.
ஆங்கிலேயேர் காலத்தில் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ராணி வேலு நாச்சியார். 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை மீட்டு ராணியாக இருந்தவர். ஆங்கிலேயர்களை வென்ற ஒரே பெண் ராணி என்ற பெருமையை பெற்றவரும் அவரே தான். வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டவர். அதனால் மாநில கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.

வேலு நாச்சியாரை தவெக தங்களின் கொள்கை தலைவர்களில் ஒருவராக அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரை மேலமடை பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்திற்கு வேலு நாச்சியாரின் பெயரை சூட்டினார். கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வேலு நாச்சியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் அவரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
வேலு நாச்சியார் பிறந்தநாள்
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1730 ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தார். அதன்படி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் பெருமைகளை வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி, வேலு நாச்சியாரின் பெருமைகளை தமிழில் நினைவு கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
நரேந்திர மோடி பதிவு
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்." என்று கூறியுள்ளார்.
இதே பதிவை மோடி தன் எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications