டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது ஸ்டாலின் கருத்து.. தேர்தலுக்கு பிறகுதான் பிரதமரை முடிவு செய்வோம்.. சிபிஐ

பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கஜா புயல் பாதிப்புக்கு ஒரு வார்த்தை கூட பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை.

ராகுல்காந்தியை பிரதமராக்குவோம். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தேசிய அளவில் ட்ரெண்ட்

தேசிய அளவில் ட்ரெண்ட்

மேலும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்று மேடையிலிருந்த மற்ற தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இரு விதமான கருத்துக்களையும் இது ஏற்படுத்தியுள்ளது.

திரினமூல் காங்கிரஸ்

திரினமூல் காங்கிரஸ்

திரினமூல் காங்கிரஸ் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இது சம்பந்தமான தனது கருத்துக்களையும் கூறி வருகிறர். தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

சுதாகர் ரெட்டி

சுதாகர் ரெட்டி

அதேபோல, அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தேர்தலுக்கு பின்தான் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, "ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும்.

கூடி முடிவெடுப்போம்

கூடி முடிவெடுப்போம்

அதுபோல, பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி ஸ்டாலின் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் எங்களை பொறுத்தவரை, தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

ஜனநாயகமா?

தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் இவ்வாறு கூறியிருப்பது புதிய கூட்டணியை பலவீனப்படுத்துமா என தெரியவில்லை. இதற்கிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழசையும் கருத்து தெரிவித்துள்ளார். இது ஜனநாயகமா, இது எதேச்சதிகாரம் என அவர் விமர்சித்துள்ளார்.

English summary
CPI General Secretary Sudhakar Reddy says "We will decide the Prime Minister only after the election"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X